Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இப்படி விளக்கம் தர முடியுமா?'

'இப்படி விளக்கம் தர முடியுமா?'

'இப்படி விளக்கம் தர முடியுமா?'

'இப்படி விளக்கம் தர முடியுமா?'

PUBLISHED ON : ஜூன் 14, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க.,வில், கூடுதலாக இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளுக்கென தனி கவனம் செலுத்துவதற்காக இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கல்வியாளர் அணி என்பது ஒரு புதிய முயற்சி. வேறு எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.

'தமிழக அரசு கல்வி தரத்தை மேம்படுத்தவும், கல்வி தொடர்பான கொள்கைகளை வரையறை செய்யவும், கல்வியில் இந்திய அளவில் உயர்ந்த இடத்தில் தமிழகத்தை சேர்ப்பதிலும், தி.மு.க., சிறப்பு கவனம் செலுத்துவதே இதன் நோக்கம்...' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க., செய்தி தொடர்பாளரால கூட இப்படி விளக்கம் தர முடியுமான்னு தெரியலப்பா...' எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us