PUBLISHED ON : ஜூலை 14, 2024 12:00 AM

'அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா போன்றவர்களை மீண்டும் கட்சியில சேர்க்க வேண்டும்' என்ற குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கின்றன. இதனால், பழனிசாமியே கட்சியின் ஒரே தலைவர் என்பதை நிரூபிக்கும் வகையில், பல் வேறு நிகழ்ச்சிகளை நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி பொறுப்பேற்ற மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை, தி.நகர் பாண்டி பஜாரில், எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணை செயலர் டாக்டர் சுனில் தலைமையில், 700 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது, 'கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை... 2 கோடி தொண்டர்களை வழிநடத்தும் பழனிசாமியை அடுத்த முதல்வராக்க சூளுரைப்போம்' என்ற உறுதிமொழியை அ.தி.மு.க.,வினர் எடுத்தனர்.
இதைப் பார்த்த ஒருவர், '2 கோடி தொண்டர்களும், லோக்சபா தேர்தலப்ப எங்க போயிருந்தாங்களாம்...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.