PUBLISHED ON : ஜூன் 30, 2024 12:00 AM

கள்ளச்சாராய விவகாரத்தில், தமிழக அரசை கண்டித்து, திருப்பூர், குமரன் சிலை அருகில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற, அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், 'ஆற்றல் படைத்த தமிழக போலீஸ், கள்ளச்சாராய வியாபாரத்தை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. கள்ளச்சாராயம் விற்பது டி.ஜி.பி.,க்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரியவில்லை; தெரிந்திருந்தால் தடுத்திருப்பர்' என்று கம்யூ., நிர்வாகி ஒருவர் முதல்வருக்கு வக்காலத்து வாங்குகிறார்.
'இவ்வளவு நடந்த பிறகும் அப்படி பேசுவதால், அந்த கட்சி உண்மையான கம்யூனிஸ்ட் தானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது' என்றார்.
அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'ஒரு மாநிலத்தை ஆளும் முதல்வரையும், டி.ஜி.பி.,யையும் கீழ்மட்ட அதிகாரிகள் அந்த அளவுக்கு சாமர்த்தியமா ஏமாத்தியிருக்காங்க... தோழருக்கு இது தெரியாது போலும்...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.