PUBLISHED ON : ஜூலை 31, 2024 12:00 AM

துாத்துக்குடியில் நடந்த தி.முக., பிரதிநிதிகள் கூட்டத்தில், கட்சியின் வடக்கு மாவட்ட செயலரும்,சமூகநலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பங்கேற்றார்.
அப்போது பேசுகையில், 'வரும் 2026 சட்டசபை தேர்தல் பணியை முதல்வர் துவக்கி விட்டார். நமக்கு, 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி என்ற இலக்குடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். லோக்சபா தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டது போல, இனியும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். தி.மு.க., அரசு செய்த சாதனைகளை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்து, நிர்ணயித்த இலக்கை விட அதிக தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அதற்கேற்ப களப்பணியாற்ற வேண்டும்' என்றார்.
மூத்த நிர்வாகி ஒருவர், 'இவங்க தன் தம்பியான துாத்துக்குடி மேயர் ஜெகனுடன் ஒற்றுமையா இல்ல... இந்த லட்சணத்துல நாம ஒற்றுமையா இருக்கணும்னு அட்வைஸ் வேற... ஊருக்கு தான் உபதேசம்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.