Dinamalar-Logo
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ திருமாவளவனின் கணக்கு!

திருமாவளவனின் கணக்கு!

திருமாவளவனின் கணக்கு!

திருமாவளவனின் கணக்கு!

PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM

Google News
Latest Tamil News
முனைவர் வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆட்சி அதிகாரம் இருந்தால் ஊழலும் இருக்கத்தான் செய்யும்' என்று, தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சிக்கு ஆதரவாக பேசும் திருமாவளவன், மறுநாளே அதற்கு மாறாக அ.தி.மு.க.,வோடு கூட்டணி வைப்பது குறித்தும் பேசுகிறார்.

இப்படி தினம் ஒரு பேச்சு என்று குழம்பிய குட்டையாய் காட்சி அளிக்கும் இவர், இறுதி அஸ்திரத்தை எடுத்து, தி.மு.க., தலைமை மீது எறிந்துள்ளார்.

அது, 'பெரிதினும் பெரிது கேள்' என்பது போல், ஒற்றையாய் தொகுதி ஒதுக்கும் தி.மு.க., தலைமையிடம், கற்றையாய், 15 தொகுதிகள் கேட்பது தான்!

இவை எல்லாவற்றிற்கும் மேல், 'சாதாரண முதல்வர் பதவி தன் இலக்கு இல்லை; அம்பேத்கர் வழிகாட்டுதல்படி தான் அடைய நினைப்பது பிரதமர் பதவி' என்று கூறியுள்ளது தான், இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச் சுவை!

'மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி' ரேஞ்சுக்கு கொஞ்சம் ஓவராக, 'பில்ட்அப்' கொடுத்துள்ளார்.

பிச்சைக்காரன் கைபிடி அளவு மாவை வைத்துக் கொண்டு, கோழி வாங்கி, ஆடு, மாடு வாங்கி, அரண்மனை கட்டி அரசனாக வாழ கனவு கண்டது போல், கூட்டணி தயவில் நாலு, 'சீட்' வெற்றி பெற்றவுடன், தன்னை மிகப் பெரிய அரசியல் ஆளுமையாக நினைத்துக் கொண்டு, பிரதமர் கனவு காண்கிறார் திருமாவளவன்.

ஒருத்தனுக்கு ஆசை இருக்கலாம்; பேராசை இருக்கக் கூடாது!

கூட்டணி தலைமையை 'தாஜா' செய்தால்தான், கூடுதலாக சில தொகுதிகள் கிடைக்கும் என்ற தன் உண்மை நிலையை திருமாவளவன் உணரவில்லையா அல்லது இடம் பெயரும் எண்ணத்தோடு பேசுகிறாரா?

'எதையும் எதிர்பார்த்து, யாரையும் மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் எங்கள் கட்சிக்கு இல்லை' என்று சொல்லிக் கொண்டாலும், அதைத்தானே இவர் செய்கிறார்!

பார்ப்போம்... கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு தானே வரும்!



      Our Apps Available On

      Dinamalar

      Follow us