Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இது உங்கள் இடம்/அன்பே பிரதானம்!

அன்பே பிரதானம்!

அன்பே பிரதானம்!


PUBLISHED ON : மே 01, 2026 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மே 01, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆ.ஈஸ்வரன், சேலத்தி லிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், நடந்து முடிந்த இந்த தேர்தல், பல கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற் படுத்தியுள்ளது.

காரணம், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்!

அதேநேரம், இக்கட்சிக்கு இன்னும் சரியான கட்டமைப்பு இல்லை; குறிப்பிடத்தக்க இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை.

சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் தேர்தல் பிரசார பயணங்களோ, பிற கட்சி தலைவர்களைப் போல விஜயின் கடின உழைப்போ இல்லை; பிரதானமான தமிழக நிகழ்வுகளுக்கு குரல் கொடுப்பதில்லை; மீடியாக்களை இதுவரையில் நேருக்கு நேர் விஜய் சந்திக்கவில்லை; ரசிக தொண்டர்களிடம் கட்டுப்பாடு, ஒழுக்கம் இல்லை.

இன்றும் கூட வெற்றி வாய்ப்பு அ.தி.மு.க.,விற்காக அல்லது தி.மு.க.,விற்கா என்றுதான் அதிகம் பேசப்படுகிறதே ஒழிய, த.வெ.க., தான் வெல்லும் என்ற நம்பிக்கை குரல்கள் ஒலிக்கவும் இல்லை. ஆனாலும், இத்தேர்தலின் ஹீரோ நடிகர் விஜய் என்றால் அது மிகையில்லை.

கூட்டணிக்கு இவர் வர மாட்டாரா என, அ.தி.மு.க., ஏங்கி காத்து கிடந்ததும், அ.தி.மு.க.,வுடன் விஜய் கூட்டணி வைத்து விடுவாரோ என, தி.மு.க., பதற்றத்துடன் இருந்ததும், நாடறிந்த ரகசியம்.

இத்தேர்தலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், யாருக்கு ஓட்டு போட வேண்டும் என பட்டி மன்றம் நடக்காத வீடே இல்லை எனும் அளவுக்கு சிறுவர்கள் முதல் முதியோர் வரை அரசியல் பேசியது தான்.

அவ்வகையில், 'ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நான் ஏற்கனவே வந்த பின்தான், அரசியலுக்கு வந்துள்ளேன்; ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஒரு விஜய் இருக்கிறான்' என்ற விஜயின் பேச்சுகள் இன்று நிரூபணமாகி உள்ளது.

கடந்த 7௦ ஆண்டுகாலமாக அரசியல் செய்து வரும் தி.மு.க., 25 கட்சிகளுடனும், 5௪ ஆண்டுகாலம் அரசியல் செய்து வரும் அ.தி.மு.க., பல கட்சிகளுடனும் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட நிலையில், தன்னந்தனியாக தேர்தலை சந்தித்துள்ளார், விஜய்.

இருந்தும், தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் பயத்திலும், பதற்றத்திலும் இருக்கின்றன என்றால், அது, தமிழக மக்கள் விஜய் மீது வைத்திருக்கும் அன்பின் மீதான கலக்கமே!

நீங்கள் செய்யுங்கள்; மற்றவர்க்கு போதிக்காதீர்!


அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: ஈ.வெ.ராமசாமியின் கொள்கையில் ஈடுபாடு கொண்ட நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, திருமணம் செய்து கொள்ளாமல் விரும்பிய ஆணுடன் இணைந்து, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று பேச, அதற்கு முதல் ஆளாக ஆதரவு குரல் எழுப்பியுள்ளார், சத்யராஜ்.

திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண் என்ன, ஒன்பது ஆண்கள் கூட வாழ்ந்து, பத்து பிள்ளைகளை பெற்றாலும் இங்கு எவரும் கேள்வி எழுப்ப போவதில்லை. ஆனால், இதையெல்லாம் ஒரு கொள்கை என்று பேசுவதும், அதை பெரிய புரட்சி என்பது போல், வழிமொழிவதும் தான் நகைப்பிற்கு இடமளிக்கிறது.

சேற்றில் புரள்வது பன்றிக்கு சுகமாக இருக்கலாம்; அதற்காக, எல்லாரும் சேற்றில் புரள வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு பெயர் பகுத்தறிவு அல்ல; அடி முட்டாள் தனம்!

உலகத்திற்கே ஒழுக்கத்தை போதித்தவன் தமிழன்; ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் ஒரு வாழ்வை, 'இல்லறம்' என்ற அற நெறிக்குள் அடக்கி, அதன்படி வாழ் பவர்கள் தமிழர்கள்.

அத்தகைய தமிழர் களின் நாகரிகத்தையும், கலாசாரத்தையும், அதன் மேன்மையையும் அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு முன்பு திரிந்த கன்னடரான ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் கொள்கையை துாக்கி பிடிக்கும் நடிகர் சத்யராஜ், தன் மனைவியின் தாலியை அறுத்து, ராமசாமியின் கொள்கையை நிலை நிறுத்தலாம்; அவர் மகள் திவ்யா, திருமணம் கடந்த உறவில் திளைத்து பல பிள்ளைகளை பெற்று, தான் கடைப்பிடிக்கும் கொள்கையை நிலை நிறுத்தலாமே...

அதைவிடுத்து அடுத்தவருக்கு ஏன் இந்த போதனை?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us