Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இது உங்கள் இடம்/ மன்னிப்பு கேட்டால் போதுமா?

 மன்னிப்பு கேட்டால் போதுமா?

 மன்னிப்பு கேட்டால் போதுமா?


PUBLISHED ON : பிப் 06, 2026 03:39 AM

Follow on Google

PUBLISHED ON : பிப் 06, 2026 03:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கில், மதுரை போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், கலெக்டர், கோவில் செயல் அலுவலர் போன்றோர் நேரில் ஆஜராகி, பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதுடன், 'நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை' என்று கூறியுள்ளனர்.

கார்த்திகை தீபத்தன்று, இந்த அதிகாரிகள் எந்த அளவு நீதிமன்ற உத்தரவை மதித்து நடந்தனர் என்பதை தொலைக்காட்சிகளின் வாயிலாக தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தானே இருந்தனர்!

மனுதாரர்கள் நீதிமன்ற உத்தரவைக் காண்பித்து, 'நாங்கள், 10 பேராவது மலையில் தீபம் ஏற்றி விட்டு வருகிறோம்' என்று மன்றாடியும், காதில் வாங்காமல் அராஜகமாக நடந்து கொண்டவர்கள், இப்போது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் எண்ணமே தங்களுக்கு இல்லை என்று கூறுகின்றனர்.

அப்படியெனில், அன்று நடந்து கொண்ட முறைக்கு என்ன பெயர்?

சட்டத்திற்கு கட்டுப்பட்டு, மக்கள் பணிகளை செய்யத் தான் அதிகாரிகள் சம்பளம் வாங்குகின்றனரே தவிர, அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக ஆடுவதற்கு அல்ல!

சகிப்புத்தன்மை கொண்டவர்கள் ஹிந்துக்கள்; அதனால், அன்று கண்ணீருடன் கலைந்து சென்றனர். மாறாக, நாம் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில், அரசின் அராஜகத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்திருந்தால், பெரும் வன்முறை அல்லவா வெடித்திருக்கும்?

அப்போதும் இதே அதிகாரிகள் தானே குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டி இருந்திருக்கும். ஆட்சியாளர்கள் சிந்தனைக்கு கழுதை குதிரையாக தெரியலாம்; அதிகாரிகளும் அதை ஒப்புக்கொண்டு செயலாற்றுவது எத்தனை முட்டாள்தனம்?

'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று சொல்லும் நேர்மையும் ஆளுமையும் இல்லாதவர்கள், இதுபோன்ற உயர் பதவிகளில் அமர்வதால், மக்களுக்கு என்ன நியாயம் கிடைத்து விடும்?

ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தேர்தல் வாயிலாக மக்கள் பாடம் கற்பிப்பர். ஆனால், அதிகாரிகள் செய்யும் இத்தகைய சட்டமீறல்களுக்கு நீதிமன்றம் தானே தண்டிக்க வேண்டும்?

கோடிக்கணக்கான ஹிந்து மக்களின் மனம் புண்படும்படி நடந்து விட்டு, இப்போது, 'மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்; நீதிமன்றத்தை நாங்கள் அவமதிக்கவில்லை' என்று சொல்வது சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள போடும் நாடகமே இன்றி வேறு என்ன?

எனவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறிய இந்த அதிகாரிகளுக்கு உரிய தண்டனை கிடைத்தால் தான், அரசியல்வாதிகள் அடிக்கும் மேளத்திற்கு ஏற்ப ஆட கொஞ்சமாவது அதிகாரிகள் யோசிப்பர்!

பொய் வாக்குறுதிகளை தவிர்க்க!


வீ.ரா.ராஜேந்திரன், அருப்புக்கோட்டையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஓட்டுகளை கவர, பிரதான அரசியல் கட்சியினர் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக கொடுப்பர். மக்கள் தான் கீழ்கண்ட உத்தரவாதங்களை வலியுறுத்த வேண்டும். அவை...

l பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்

l மேல்நிலைப்பள்ளி வரை அனைவருக்கும் தரமான இலவச கல்வியையும், அரசு மருத்துவமனைகளில் இலவச உயர்தர சிகிச்சைகளும் தரப்பட வேண்டும்

l லஞ்சம், ஊழலை அறவே துடைத்தெறிய, நேர்மையான கண்டிப்புடன் கூடிய அதிகாரிகள், தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட வேண்டும்

l அமைச்சர்கள் தங்களுக்கான துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்

l இலவசங்களை அனைவருக்கும் அள்ளித்தராமல், 'தேவைப்பட்டோருக்கு மட்டும்' என்று கூறி கிள்ளித்தர வேண்டும்

l மாநிலத்தின் வரவுக்கேற்ப செலவுகள் செய்து, நிதி நிலையில் பற்றாக்குறை இல்லாமல், உபரி பட்ஜெட் போட வேண்டும்

l அரசு திட்டங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியாளர்கள் தங்கள் கட்சி, 'ஸ்டிக்கரை' ஒட்டக்கூடாது

l அரசு செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் குறித்து, ஊராட்சி, நகர, மாமன்ற உறுப்பினர் கூட்டங்கள் வாயிலாக, பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டு, அதன்பின்பே செயல்படுத்த வேண்டும்

l 'செய்வன திருத்தச் செய்' என்பது போல், சாலைகள் மற்றும் அரசு கட்டடங்கள், பாலங்கள் தரமானதாக அமைக்க வேண்டும்.

இந்த உத்தரவாதங் களுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஓட்டு என்று கூற வேண்டும்; வெற்றி பெற்ற கட்சி, ஆட்சிக்கு வந்ததும் இவற்றை நிறைவேற்றவில்லை என்றால், அடுத்த தேர்தலில் அக்கட்சியினர் காலில் விழுந்து கேட்டாலும் ஓட்டு போடக் கூ டாது.

மக்கள் இந்த முடிவை எடுத்தால், வருங்காலத்திலாவது பொய் வாக்குறுதிகள் கொடுப்பது தவிர்க்கப்படும்!

50 ஆண்டுகள் வாய்ப்பு கொடுக்கட்டுமே!


ஆர்.ராமசாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜனாதிபதி உரையில், வளர்ந்த இந்தியா குறித்து அதிகம் இருந்தது. ஆனால், அதற்கு தெளிவான இலக்குகளோ, காலக்கெடுவோ இல்லை. புதிய வேலை உறுதி திட்டத்தின் வாயிலாக, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு பறித்துள்ளது' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

நாடு விடுதலை அடைந்த நாள் முதலாக தொடர்ந்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்தியில் கோலோச்சிக் கொண்டிருந்த கட்சி காங்கிரஸ்.

அதிலும், 1947 -- 72 வரை மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்., தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் வறுமையை ஒழிக்க முடியாமல், 1971களில் பிரதமர் இந்திரா பொதுக் கூட்டங்களில் பேசும் போது கடைசியில், 'கரிபி ஹடாவோ; தேஷ் பச்சாவ்' என்று உரக்க குரல் எழுப்புவார்.

கூட்டத்தினர் அதை திருப்பி கூறுவர்.

கரிபி ஹடாவோ என்றால், வறுமையை அகற்று; தேஷ் பச்சாவ் என்றால், நாட்டைக் காப்பாற்று என்று அர்த்தம்!

தொடர்ந்து, 25 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்தும் வறுமையை ஒழித்து, நாட்டைக் காப்பாற்ற முடியாமல் வெறுமனே கோஷம் போட்டவர் இந்திரா.

இப்படி, சுதந்திரத்திற்கு பின், 50 ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து கோலோச்சியும் ஒழிக்க முடியாத வறுமையை, ஆட்சியில் அமர்ந்து வெறும், 10 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கும் பா.ஜ.,வை பார்த்து, வறுமை ஒழிப்பிற்கான தெளிவான இலக்குகளும், காலக்கெடுவும் இல்லை என்கிறார், கார்கே.

காங்கிரஸ் போல், பா.ஜ.,வும் தொடர்ந்து, 50 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்திருக்கட்டும்; பின்னர் கேளுங்கள், வறுமை முற்றிலும் ஒழிக்கப் பட்டுள்ளதா என்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap