Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ அரசியல் சதுரங்கத்தில் ஜெயிக்க கூட்டம் மட்டும் போதாது!

அரசியல் சதுரங்கத்தில் ஜெயிக்க கூட்டம் மட்டும் போதாது!

அரசியல் சதுரங்கத்தில் ஜெயிக்க கூட்டம் மட்டும் போதாது!

அரசியல் சதுரங்கத்தில் ஜெயிக்க கூட்டம் மட்டும் போதாது!

PUBLISHED ON : செப் 22, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கியபோது, 'எவருடைய ஓட்டு வங்கியில் கை வைக்கப் போகிறாரோ...' என்று, கூட்டத்தைக் கண்டு மிரண்டனர், எதிர்க்கட்சியினர்.

இன்று, பரிசுத்தவான் வேடம் போடும் எந்த கட்சிக்கும் காசு கொடுக்காமல் கூட்டம் சேருவதில்லை. விஜய்க்கு கூடிய கூட்டம் இயல்பாக தானாக கூடியது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வர்.

இக்கூட்டத்தை முறையாக பயன்படுத்த விஜய் தேர்தல் வியூகம் வகுக்க வேண்டும்.

மக்கள் பிரச்னைகளை உள்ளூர், மாவட்டம், மாநிலம், தேசியம் என பிரித்து, பிரசாரத்திற்கு செல்லும் போது, ஊரின் பெருமை, தேவைகள் குறித்து விஜய் பேச வேண்டும். கூடவே, பிரசாரத்திற்கு செல்லும் ஊரின் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்பு குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அந்தந்த மாவட்டத்தின் இயற்கை வளங்கள், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சிக்கு, த.வெ.க., என்ன திட்டம் வைத்துள்ளது என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.

மாநில அளவில் விவசாயத்தை அழிக்காமல், உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உத்தரவாதம் தர வேண்டும். மாநில வர்த்தகர் சங்கம், தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தி தீர்வுகளை அறிய வேண்டும்.

மேலும், கனிமவள கொள்ளை, நீராதாரம், ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிராக இளைஞர் படையை உருவாக்க வேண்டும்.

இன்று தமிழகத்தில் கட்டமைப்பு, நிதி வசதி, பிரசார சாதனங்கள், மீடியா என எல்லாம் தி.மு.க., வசம் உள்ளது. அசுர பலம் மிக்க கட்சியையும், அரசையும் எதிர்த்து நிற்பது எளிதல்ல. 12 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.,வும் சர்வ வல்லமையுடன் நிற்கிறது.

இந்நிலையில், அரசியல் சதுரங்கத்தில் ஜெயிக்க கூட்டம் மட்டும் போதாது. சமயோசிதம், சூழ்ச்சி, தோல்விகளை எதிர்கொள்ளும் பக்குவமும், அதில் இருந்து மீளும் திறனும் தேவை.

அதனால், பிரசாரத்திற்கு கூடும் கூட்டத்தினர் அனைவரையும் ஓட்டுச்சாவடிக்கு வரவழைத்து, தன் கட்சிக்கு ஓட்டளிக்க வைத்தால் தான் விஜய் ஆட்சிக்கு வர முடியும்!-----------------------------------

எனவே, இனியும் கேரவனுக்குள் அமர்ந்து சொகுசு அரசியல் செய்யாமல், மக்கள் அரசியல் செய்ய விஜய் பொதுவெளிக்கு வர வேண்டும்!

இலவசத்திற்கு பஞ்சமில்லை!




வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலை மனதில் வைத்து, 'வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்' என்று அறிவித்துள்ளது, பீஹார் அரசு.

இலவச திட்டங்களை அறிவிப்பதில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், தமிழக திராவிட கட்சியினர். தற்போது, இவர்களை பின்பற்றி, அனைத்து மாநிலங்களும் தேர்தலின் போது, வாக்காளர்களை கவர, இலவச திட்டங் களை அறிவிக்க ஆரம்பித்து விட்டன.

கடந்த சட்டசபை தேர்தலில், மகளிர் ஓட்டுகளை கவர, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து சேவை வழங்கப்படும்' என்று வாக்குறுதி அளித்து, வெற்றி பெற்றது, தி.மு.க.,

பிற மாநில அரசியல் கட்சிகளும், இதையே தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து, ஆட்சியை பிடித்துள்ளன.

டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்க காரணமே, மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி தான்.

இந்த ஒற்றை வாக்குறுதியால், டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆதிக்கத்தை அடியோடு துடைத்து எறிந்தது, பா.ஜ.,!

தேர்தல்களில் இப்படி போட்டி போட்டு இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவித்து, அதன் வாயிலாக ஓட்டுகளை பெற்று ஆட்சி அமைக்கின்றன. அதேநேரம், அவர்கள் அளித்த இலவச திட்டங்களை அமல்படுத்துவதற்கே அரசின் வருமா னம் முழுதும் போய் விடும் என்ற நிலையில், மாநில வளர்ச் சிக்கான திட்டங்களை செயல்படுத்த நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது.

ஆனால், அரசியல்வாதிகள் இதுகுறித்து கவலைப்படுவதில்லை. எப்படியாவது தேர்தலில் ஜெயித்து, அதிகாரத்திற்கு வந்து விட வேண்டும் என்பதில் குறியாக இருப்பதால், ஒவ்வொரு தேர்தலுக்கும் இலவச வாக்குறுதிகளை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.

இப்படியே போனால், இலவச திட்டங்களை நம்பி ஓட்டளித்தவர்கள் கூட, 'இலவசங்கள் வேண்டாம்' என்று போராடும் விசித்திர சூழல்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.

காரணம், இலவச திட்டங்களால் ஆக்கப்பூர்வமான, மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் முடங்கிப் போகின்றன.

எனவே, பூனைக்கு யார் மணியை கட்டுவது என்று யோசிக்காமல், நீதிமன்றம் தானே முன் வந்து இதை ஒரு வழக்காக எடுத்து, கட்சிகள் இலவச வாக்குறுதி கள் அளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்!

யார் குற்றவாளி?


அ.யாழினிபர்வதம், சென்னை யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் காஞ்சிபுரத்திலிருந்து, சென்னை, கோயம்பேடு வந்த பேருந்தில் பெண் பயணி பையில் வைத்திருந்த, 5 சவரன் நகை திருடு போனது. போலீசார் விசாரணையில், அதை திருடியது சக பயணியான மற்றொரு பெண் என்பது தெரிந்தது.

இவர் திருப்பத்துார் மாவட்டம், நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் என்பதை அறிந்தபோது, ஆச்சரியமாகவும், வேதனை யாகவும் இருந்தது.

அதிலும், இவர் மீது, 10 திருட்டு வழக்குகள் இருக் கின்றனவாம். போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், 15 ஆண்டுகளாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருவ தாகவும், வசதிகள் பெருகினாலும் திருடும்போது கிடைக் கும், 'த்ரில்'லிங்கிற்காக தொடர்ந்து திருடுவதாக கூறியுள்ளார்.

நம் கேள்வி என்ன வென்றால், குற்றப்பின்னணி உடைய ஒருவரை, மக்கள் எப்படி தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த னர்?

பொதுவாக, உள்ளாட்சி பொறுப்புகளுக்கு கட்சி அடிப்படையில் மக்கள் எவரையும் தேர்ந்தெடுப்பதில்லை. தங்களுக்கு நன்மை செய்யக் கூடியவராக இருப்பாரா என்பதை கருத்தில் கொண்டு, தங்கள் ஊரைச் சேர்ந்தவரைத் தான் தேர்ந்தெடுப்பர். அப்படியிருந்தும், குற்ற பின்னணி கொண்டவர்கள் ஜெயிக்கின்றனர் என்றால், இங்கு, யார் குற்றவாளி?

ஓட்டுப் போட்ட மக்கள் தானே ஜனநாயக குற்றவாளிகள்!

ஒருவேளை, 'ஓட்டுக்கு நோட்டு' என்ற பார்முலாப்படி திருடிய பணத்தில் பங்கு கொடுத்ததால், மக்கள் மதி மயங்கி ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்து விட்டனரோ!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us