/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/புதுச்சேரி நபரின் நுரையீரலால் சென்னை நபருக்கு மறுவாழ்வுபுதுச்சேரி நபரின் நுரையீரலால் சென்னை நபருக்கு மறுவாழ்வு
புதுச்சேரி நபரின் நுரையீரலால் சென்னை நபருக்கு மறுவாழ்வு
புதுச்சேரி நபரின் நுரையீரலால் சென்னை நபருக்கு மறுவாழ்வு
புதுச்சேரி நபரின் நுரையீரலால் சென்னை நபருக்கு மறுவாழ்வு
UPDATED : ஜன 06, 2024 12:45 PM
ADDED : ஜன 05, 2024 10:40 PM

சென்னை:புதுச்சேரியில் இருந்து சாலை மார்க்கமாக இரண்டு மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட நுரையீரல், சென்னையைச் சேர்ந்த நபருக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுஉள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், பெருமூளை தமனி குருதிநாள அழற்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, 43 வயது பெண் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் நுரையீரலை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்த திட்டமிடப்பட்டது.
அந்த வகையில், சாலை மார்க்கமாக இரண்டு மணி நேரத்தில், வடபழனி காவேரி மருத்துவமனைக்கு, நுரையீரல் கொண்டு வரப்பட்டு, அங்கு ஓராண்டுக்கு மேலாக சிகிச்சை பெற்று வரும், 50 வயது நபருக்கு பொருத்தப்பட்டது.
இது, வடபழனி காவேரி மருத்துவமனையில் நடைபெறும் முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை எனவும், இதற்கு காரணமாக இருந்த டாக்டர்கள், போலீசார் உள்ளிட்டோருக்கு மருத்துவமனை நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.