Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 100 வயது பாட்டிக்கு கனகாபிஷேக விழா

100 வயது பாட்டிக்கு கனகாபிஷேக விழா

100 வயது பாட்டிக்கு கனகாபிஷேக விழா

100 வயது பாட்டிக்கு கனகாபிஷேக விழா

UPDATED : ஜூன் 10, 2025 07:36 AMADDED : ஜூன் 10, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
பெரம்பலுார்,: பெரம்பலுார் மாவட்டம், புதுநடுவலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம், 100. இவரது கணவர் பசுபதி ஏற்கனவே இறந்து விட்டார். கமலத்துக்கு, இரு மகன்கள், மூன்று மகள்கள், நான்கு பேரன்கள், ஐந்து பேத்திகள், ஏழு கொள்ளுப்பேரன்கள், ஏழு கொள்ளுப்பேத்திகள், இரண்டு எள்ளுப்பேரன்கள், ஐந்து எள்ளுப்பேத்திகள் உட்பட, 49 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

கமலம் பாட்டி, 100 வயது எட்டியதையொட்டி, அவரது குடும்பத்தினர், அவருக்கு கனகாபிஷேக விழா நடத்தினர். விழா, புதுநடுவலுார் கிராமத்தில், அவரது இல்லத்தில் நடந்தது. விழாவில், குடும்ப உறுப்பினர்கள் 49 பேரும் பங்கேற்று அவரிடம் ஆசி பெற்றனர். பின், 1,000 குடும்பங்களுக்கு பட்டு வேட்டி, சேலை, அன்னதானம் உட்பட நல உதவிகள் வழங்கப்பட்டன.

கமலம் பாட்டி, மண்ணச்சநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவனின் தாய்வழி பாட்டி என்பதும், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசனின் மாமியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us