Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ கல்வராயன் மலை பழங்குடியின மாணவி சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு

கல்வராயன் மலை பழங்குடியின மாணவி சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு

கல்வராயன் மலை பழங்குடியின மாணவி சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு

கல்வராயன் மலை பழங்குடியின மாணவி சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு

UPDATED : ஜூன் 06, 2025 09:07 AMADDED : ஜூன் 06, 2025 02:57 AM


Google News
Latest Tamil News
பெத்தநாயக்கன்பாளையம்,: கல்வராயன் மலையைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி, சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு பெற்றதால், பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன் மலை, கருமந்துறையைச் சேர்ந்தவர் ஆண்டி, 51. இவரது மனைவி கவிதா, 43. இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, 24, ராஜேஸ்வரி, 17, பரமேஸ்வரி, 15, என்ற மகள்களும், மகன் ஸ்ரீகணேஷ், 22, என்பவரும் உள்ளனர்.

தையல் தொழில் செய்து, நான்கு பேரையும் படிக்க வைத்த ஆண்டி, இரு ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் இறந்தார். கவிதா கூலி வேலை செய்கிறார். ஜெகதீஸ்வரி, பி.எஸ்சி., வேதியியல் முடித்து, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

கணேஷ், பி.எஸ்சி., கணிதம் முடித்து, தந்தையின் தையல் தொழிலை மேற்கொள்கிறார். பரமேஸ்வரி, பிளஸ் 1 படிக்கிறார்.

இதில் ராஜேஸ்வரி, பெருந்துறையில் உள்ள அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்றார்.

தொடர்ந்து சமீபத்தில் நடந்த தேர்வில், அகில இந்திய அளவில், 417வது இடம் பிடித்த அவர், சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு பெற்றார்.

இதன்மூலம், கல்வராயன் மலை பகுதியில் இருந்து, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்க உள்ளார்.

ராஜேஸ்வரியை, மலைப்பகுதி மக்களும், அப்பகுதியினரும் பாராட்டி வருகின்றனர்.

தந்தை புற்றுநோயால் இறந்த நிலையில், குடும்பத்தினர் வருவாயின்றி தவித்தபோதும், ராஜேஸ்வரியை, கூலி வேலை செய்து படிக்க வைத்த தாய் கவிதா, உறுதுணையாக இருந்த அண்ணன் கணேஷ் உள்ளிட்ட குடும்பத்தினரை, அப்பகுதி மக்கள், ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.

தமிழக அரசே ஏற்கும்


சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்க இடம் கிடைத்துள்ள பழங்குடியின மாணவியின் கல்விச்செலவை அரசு ஏற்பதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தந்தையை இழந்தாலும், அவரது கனவை தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும், அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஸ்வரியின் சாதனைக்கு சல்யூட். அவரது உயர்கல்வி செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என, மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.ராஜேஸ்வரி போன்றவர்கள் சேருவது தான், ஐ.ஐ.டி.,க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக அரசு தொடர்ந்து உழைக்கும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us