Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்தை மணந்த காதலி

 ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்தை மணந்த காதலி

 ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்தை மணந்த காதலி

 ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்தை மணந்த காதலி

UPDATED : டிச 01, 2025 07:18 AMADDED : டிச 01, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
நான்டெட்: மஹாராஷ்டிராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் உடலை, அவரை காதலித்த பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவின் நான்டெட் பகுதியைச் சேர்ந்த சாஷம் டேட் மற்றும் ஆஞ்சல், கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆஞ்சலின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும், குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி சாஷமை திருமணம் செய்ய ஆஞ்சல் முடிவெடுத்தார்.

வழக்குப்பதிவு இதை அறிந்த ஆஞ்சலின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள், கடந்த மாதம் 27ம் தேதி சாஷமை கடுமையாக தாக்கியதுடன், துப்பாக்கியால் சுட்டனர்.

அதன்பின் அவரது தலையில் கல்லால் தாக்கியதில், சாஷம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆஞ்சலின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களையும் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து சாஷமின் இறுதிச்சடங்கு அவரது வீட்டில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் பங்கேற்ற ஆஞ்சல், தன் காதலனின் உடலை பார்த்து கதறி அழுததுடன், தன் நெற்றியில் குங்குமமிட்டு, திருமணம் செய்து கொண்டார். அவரது இச்செயலைப் பார்த்த அப்பகுதி மக்கள் கண் கலங்கினர்.

மரண தண்டனை அதன்பின் செய்தியாளர்களிடம் ஆஞ்சல் கூறுகையில், “சாஷமின் இறப்பில் தங்களின் காதல் வென்றது; அவரது வீட்டிலேயே மருமகளாக என் வாழ்நாள் முழுதும் வாழப் போகிறேன்.

“சாஷமின் உயிரிழப்பிற்கு காரணமான என் தந்தை மற்றும் சகோதரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்,” என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us