Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ படகு உரிமம் வழங்க ரூ.1600 லஞ்சம்; மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

படகு உரிமம் வழங்க ரூ.1600 லஞ்சம்; மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

படகு உரிமம் வழங்க ரூ.1600 லஞ்சம்; மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

படகு உரிமம் வழங்க ரூ.1600 லஞ்சம்; மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

ADDED : ஜூன் 25, 2025 09:25 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மீனவரின் நாட்டுப்படகிற்கு உரிமம் வழங்குவதற்கு ரூ.1600 லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் 49, கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைசேர்ந்த மீனவர் ஒருவர் இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக்கிடம் கடந்த வாரம் மனு அளித்துள்ளார்.

அதற்கு அனுமதி வழங்க ரூ.5100 வேண்டும் எனக்கேட்டுள்ளார். அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.3500 தானே என மீனவர் கேட்டார். தனக்கு தனியாக ரூ.1600 கொடுத்தால் தான் அனுமதி கிடைக்கும் என ஆய்வாளர் கூறினார்.

எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத மீனவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் ஆலோசனைப்படி மீனவர் , சகுபர் சாதிக்கை நேற்று அலுவலகத்தில் சந்தித்து அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.1600ஐ கொடுத்தார்.

அப்பணத்தை வாங்கிய அவரை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us