/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ இரவு பிரியாணி சாப்பிட்டு உறங்கிய எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு இரவு பிரியாணி சாப்பிட்டு உறங்கிய எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு
இரவு பிரியாணி சாப்பிட்டு உறங்கிய எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு
இரவு பிரியாணி சாப்பிட்டு உறங்கிய எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு
இரவு பிரியாணி சாப்பிட்டு உறங்கிய எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு
ADDED : மே 31, 2025 04:42 AM

கோவை; சரவணம்பட்டி பகுதியில், இரவில் பிரியாணி சாப்பிட்டு உறங்கிய சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
சரவணம்பட்டி, செந்தில் கோல்டன் கேட் பேஸ் ஒன்றில் வசித்து வருபவர் சத்திய பிரபு; இவரது மகன் சஞ்சீவ், 8 தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, சரவணம்பட்டி சாலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில், பிரியாணி வாங்கி வீட்டில் இருந்த அனைவரும் சாப்பிட்டனர்.
சிறுவன் சஞ்சீவும் பிரியாணி சாப்பிட்டு விட்டு, இரவு 12:00 மணி வரை விளைாயடிக்கொண்டிருந்தார். பின்னர், அனைவரும் உறங்க சென்றனர். நேற்று காலை அனைவரும் எழுந்த பிறகும், சஞ்சீவ் எந்த அசைவும் இன்றி படுக்கையில் இருந்தார். இதையடுத்து, அவரது பெற்றோர் சஞ்சீவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் சிறுவனை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறினர். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.