/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்த 21 பெண்கள்கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்த 21 பெண்கள்
கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்த 21 பெண்கள்
கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்த 21 பெண்கள்
கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்த 21 பெண்கள்

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றத்தில் கிறிஸ்துவ மதத்திலிருந்து 21 பெண்கள் மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்த தாய் மதம் தழுவும் விழா நடந்தது.
ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்விழா நடந்தது. மதுரை அனுப்பானடியை சேர்ந்த 21 பெண்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகி மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்தனர்.
அவர்கள் நேற்று சரவண பொய்கையில் நீராடி, ஆறுமுக நயினார் கோவிலில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, 'வெற்றிவேல் வீரவேல்' என முழக்கமிட்டு, ஹிந்து மதத்தில் இணைந்தனர்.
ஹிந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் அரசுப்பாண்டி கூறுகையில், ''பல்வேறு சலுகைகள் தருவதாக கூறி ஹிந்துக்களை மாற்று மதத்திற்கு அழைத்து செல்கின்றனர். ஆனால், எவ்வித சலுகையும் கிடைக்காமல் அவர்கள் அங்கு துன்பப்படுகின்றனர். இதனால் அவர்களாக விரும்பி மீண்டும் ஹிந்து மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்,'' என்றார்.