/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ஆட்டோவில் தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர் ஆட்டோவில் தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர்
ஆட்டோவில் தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர்
ஆட்டோவில் தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர்
ஆட்டோவில் தவறவிட்ட நகையை ஒப்படைத்த டிரைவர்
UPDATED : ஆக 01, 2024 06:38 PM
ADDED : ஆக 01, 2024 01:00 AM

யானைக்கவுனி, மாதவரம், வி.ஆர்.டி.நகரைச் சேர்ந்தவர் தீபா, 23.இவர், தன் 5 சவரன் பழைய நகையை மாற்றி புதிய நகை வாங்க, கணவர் சதீசுடன் வீட்டில் இருந்து,'ராபிடோ' ஆட்டோவில் சவுகார்பேட்டை சென்றார்.
அங்கு இறங்கிய போது, நகை பையை ஆட்டோவில் மறந்து விட்டுச் சென்றனர். நகைக்கடை அருகே சென்ற போது, பை காணாமல் போனது தெரிந்தது.இதுகுறித்து, யானைக்கவுனி காவல் நிலையத்தில், நடந்ததை கூறியுள்ளனர். பின், 'ராபிடோ' வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர் புழல், சக்திவேல் நகர், 38வது தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பெஞ்சமின், 41, என தெரிந்தது.
அவரது மொபைல்போன் எண்ணை பெற்று தொடர்பு கொண்ட போலீசார், விபரத்தை கூறியுள்ளனர். உடனே, பெஞ்சமின் ஆட்டோவில் தேடிய போது, நகை பை இருந்துள்ளது. அதன் பின், யானைக்கவுனி காவல் நிலையத்தில், பெஞ்சமின் நகைகளை ஒப்படைத்தார். நகைகளை சரிபார்த்த போலீசார், அவற்றை தீபாவிடம் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவருக்கு தீபா நன்றி தெரிவித்த நிலையில், போலீசாரும் அவரை வெகுவாக பாராட்டினர்.