/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/முதியவர் சிதறிய பணத்தை சேகரித்து தந்த மக்கள்முதியவர் சிதறிய பணத்தை சேகரித்து தந்த மக்கள்
முதியவர் சிதறிய பணத்தை சேகரித்து தந்த மக்கள்
முதியவர் சிதறிய பணத்தை சேகரித்து தந்த மக்கள்
முதியவர் சிதறிய பணத்தை சேகரித்து தந்த மக்கள்
UPDATED : ஜூலை 09, 2024 10:26 AM
ADDED : ஜூலை 09, 2024 12:01 AM

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முதியவர் பழனிநாயக்கர், 70. இவர், கால்நடைகளை விற்ற பணம், 2 லட்சம் ரூபாயை, ஒரு நைலான் பையில் வைத்து, வங்கிக்கு செல்ல நேற்று மதியம், 12:00 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.
டூ - வீலரில் சென்ற வாலிபரிடம், 'லிப்ட்' கேட்டு வங்கிக்கு சென்று கொண்டிருந்தபோது, கையில் மாட்டியிருந்த பணப்பை, வண்டி சைலன்சரில் பட்டு, துளை ஏற்பட்டு, 500 ரூபாய் தாள்கள் சாலையில் பறந்தன.
அப்பகுதி மக்கள், கூச்சலிட்டு, டூ - வீலரை துரத்தி பிடித்தனர். பழனிநாயக்கர் பையில் இருந்த பணம் முழுதும் சாலையில் பரவிக் கிடந்தன.
அதிர்ச்சி அடைந்த அவரிடம், அப்பகுதி மக்கள், பணத்தை முழுதும் எடுத்து பையில் போட்டு, பழனிநாயக்கரிடம் கொடுத்து, 'எண்ணி பாருங்கய்யா' என்றனர். அவர் நன்றியுடன் பணத்தை வாங்கி கொண்டார். இந்த சம்பவம், கோனேரிப்பட்டி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.