/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 'பிரேக்' பிடிக்காத மகளிர் இலவச பஸ்: கல்லை போட்டு நிறுத்திய கண்டக்டர் 'பிரேக்' பிடிக்காத மகளிர் இலவச பஸ்: கல்லை போட்டு நிறுத்திய கண்டக்டர்
'பிரேக்' பிடிக்காத மகளிர் இலவச பஸ்: கல்லை போட்டு நிறுத்திய கண்டக்டர்
'பிரேக்' பிடிக்காத மகளிர் இலவச பஸ்: கல்லை போட்டு நிறுத்திய கண்டக்டர்
'பிரேக்' பிடிக்காத மகளிர் இலவச பஸ்: கல்லை போட்டு நிறுத்திய கண்டக்டர்
UPDATED : ஜூலை 13, 2024 01:00 PM
ADDED : ஜூலை 13, 2024 12:25 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மகளிருக்கான கட்டணமில்லாத அரசு பஸ்சில் பிரேக் பிடிக்காமல் சென்றதால், கண்டக்டர் கல்லை போட்டு நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2:00 மணிக்கு டி.என்.32-என்-3728 பதிவெண் கொண்ட அரசு டவுன் பஸ் (தடம் எண்-15) திட்டக்குடிக்கு புறப்பட்டது.
பஸ், விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவை கடந்த போது, திடீரென பிரேக் பிடிக்கவில்லை. சுதாரித்த டிரைவர், பஸ்சை மெதுவாக இயக்கினார். இதனையறிந்த பெண் பயணிகள் அலறினர்.
பாலக்கரை மேம்பாலத்தில் ஏறும்போது பஸ்சின் வேகம் குறைந்ததால், கண்டக்டர் இறங்கி ஓடிச் சென்று, அருகிலிருந்த கல்லை எடுத்து வந்து, பின்புற டயர்களில் வைத்து, பஸ்சை நிறுத்தினார்.
இதனால் நிம்மதியடைந்த பயணிகள், பஸ்சை விட்டு இறங்கி உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர். அப்போது, இலவச பயணம் என்பதால், பயணிகள் மீது அக்கறை இல்லையா என பெண் பயணிகள் திட்டி தீர்த்தனர்.
சில மாதங்களுக்கு முன் உளுந்துார்பேட்டை சாலையில் சென்ற மகளிர் இலவச பஸ், வயலுார் மேம்பாலத்தை கடந்தபோது கரும்புகை வெளியேறியதால், பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.