Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ சாதிக்க வயது தடையல்ல: 52 வயதில் சாத்தியமான பி.எச்டி.,

சாதிக்க வயது தடையல்ல: 52 வயதில் சாத்தியமான பி.எச்டி.,

சாதிக்க வயது தடையல்ல: 52 வயதில் சாத்தியமான பி.எச்டி.,

சாதிக்க வயது தடையல்ல: 52 வயதில் சாத்தியமான பி.எச்டி.,

UPDATED : ஜூன் 09, 2024 04:17 PMADDED : ஜூன் 08, 2024 11:55 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

முப்பது வயதைக் கடந்தவர்கள் கூட 'இந்த வயசுல படிச்சு நான் என்ன செய்யப் போறேன்?' என, சலித்துக் கொள்ளும் மனநிலையில் உள்ள போது, 'பி.எச்டி., படித்து முனைவர் பட்டம் பெற வேண்டும்' என்ற தனது இளம் வயது ஆசையை, 52 வயதில் எட்டியிருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த கோகிலசெல்வி.

திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் எழுதிய சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகம், கட்டுரை தொகுப்பை ஆராய்ந்து, 'சுற்றுச் சூழல் படைப்புகளில் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள்' என்ற தலைப்பில், அவர் ஆய்வு கட்டுரையை எழுதி, பாரதியார் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில், தமிழ்த் துறைத் தலைவர் உதவி யுடன், ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அவருக்கு, திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவை கூட்டத்தில் கோகிலசெல்விக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆர்வம் எப்படி வந்தது என்று அவரிடமே கேட்டோம்.

கல்லுாரி படிக்கும் போதே, பி.எச்.டி., படிக்கணும்ங்கற ஆசை இருந்துச்சு; ஆனா முடியல. இருந்தாலும், தொடர்ந்து அதற்கான முயற்சியை எடுத்தேன். சுப்ரபாரதி மணியன் எழுதிய நுால்களை என்னோட ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டேன். எல்லாரும் கண்டிப்பா உயர்கல்வி படிக்கணும்; குறிப்பாக, பெண் குழந்தைகள் கட்டாயம் கல்லுாரிக்கு போய் படிக்கணும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மாணவ சமுதாயம் உணரணும்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us