/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/'ஒரு குடிநோயாளியால் 200 பேர் மன நோயாளியாகின்றனர்!''ஒரு குடிநோயாளியால் 200 பேர் மன நோயாளியாகின்றனர்!'
'ஒரு குடிநோயாளியால் 200 பேர் மன நோயாளியாகின்றனர்!'
'ஒரு குடிநோயாளியால் 200 பேர் மன நோயாளியாகின்றனர்!'
'ஒரு குடிநோயாளியால் 200 பேர் மன நோயாளியாகின்றனர்!'
UPDATED : ஜூன் 26, 2024 01:06 PM
ADDED : ஜூன் 26, 2024 01:08 AM

'குடி, குடியை கெடுக்கும்' என, நன்கு அறிந்திருந்தும், மதுவின் பிடியில் இருந்த மீள முடியாமல் இருப்பவர்கள் பலர். மது அருந்துவதால் அறிவியல் ரீதியாக, உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விளக்குகிறார்.
கடந்த, 40 ஆண்டுகளாக, 'மதுப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம்' நடத்தி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான ராஜூ கூறியதாவது:
சமீபத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம், நாட்டையே உலுக்கியுள்ளது. 'மனிதர்கள், ஏன் இப்படி, மதுவுக்கு அடிமையாகின்றனர்' என்பது காலம் காலமாக உள்ள கேள்வி. மதுப்பழக்கத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கண்ணீ ரில் தத்தளிக்கின்றன.
இப்பிரச்னையை எதிர்கொள்வது, சமூகத்தின் முன்புள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது. பள்ளி மாணவர்கள் கூட மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பது, மிகப்பெரிய அவலம். அறிவியல் பூர்வமாக மதுவைப்பற்றி அறிந்துக் கெள்வது, ஒருவகையில் தீர்வு ஏற்படுத்தலாம்.
மேலைநாட்டு மதுவகை துவங்கி உள்நாட்டு தயாரிப்பு வரை அனைத்திலும் எத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்திருக்கிறது. இந்த வேதிப் பொருளில், எரிக்கும் தன்மை, அரிக்கும் தன்மை, மரத்துப் போகும் என்ற மூன்று பண்புகளை இவை கொண்டுள்ளன. மது அருந்திய பின், அது உடலுக்குள் சென்ற சில பகுதிகளை அரித்து விடுகிறது. மூளையில் உள்ள செல்களை அழித்து நாசப்படுத்துகிறது இவ்வாறு, அழிக்கப்பட்ட செல்கள் மீண்டும் உருவாகாது.
மூளையில் தாக்குதல்
மரத்து போகக்கூடிய தன்மை வந்து விட் டால், மது குடிக்கும் அளவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்ற நிலை தான் ஏற்படும். நாம் உண்ணும் உணவு பொருட்கள் குடலில் உள்ள சென்று ஜீரணமாகி அதன் சத்துப் பொருட்கள் மட்டும், நம் ரத்தத்தில் கலக்கும். ஆனால், மது வகைகள் அருந்தியவுடன் எவ்வகையான மாற்றமும் ஏற்படாமல் அப்படியே ரத்தத்தில் கலக்கிறது. ரத்த ஓட்டத்தில் கலந்து முதலில் மூளையை தாக்குவதால் தான் போதை ஏற்படுகிறது.
கல்லீரல் தான் மதுவை ஜீரணிக்கும் ஒரே உறுப்பு. கல்லீரல், ஒரு மணி நேரத்துக்கு 10 மி.கிராம் அளவில் மதுவை ஜீரணித்து வெளியேற்றும். ஒருவர், 200 மில்லி என்ற அளவில் மது அருந்தினாலே, அது அவரின் ரத்தத்தில், 12 மணி நேரம் இருக்கும். மதிய வேளையில் மதுவை பற்றி சிந்திக்க ஆரம்பித்தால், அவர் குடிநோயாளியாகிறார் என்பது உறுதியாகிவிடும்.
அவரால் குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, குடும்பம் சீரழியும். ஒரு குடிநோயாளி, தன் உடல், மனதை பாழ்படுத்துவதுடன், தம் குடும்பத்தினர், உற்றார், உறவினர் என, 200 பேரை மன நோயாளியாக மாற்றுகிறார் என்கிறது ஒரு ஆய்வு.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தான் காரணம், சாலை விபத்து நேரிட, 99 சதவீத காரணமாகி விடுகிறது. மது அருந்தும் முன், இது நமக்கு தேவை தானா என, சிந்திக்க வேண்டும். காலம் கடந்த பின் மதுவின் பிடியில் இருந்து மீள்வது சிரமம். இவ்வாறு, அவர் கூறினார்.
(இன்று, போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம்)