sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : மார் 19, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2026 03:30 AM

3


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: 'த.வெ.க., வுடன் கூட்டணி பேச்சு எதுவும் நடக்கவில்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பலமுறை தெளிவுப் படுத்தி விட்டார். அ.தி.மு.க., தலைமையை ஏற்று, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு த.வெ.க., வந்தால், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு, சட்டசபை தேர்தலில் லாபம் கிடைக்கும்; இல்லையெனில் அவருக்கு தா ன் நஷ்டம். லாபமா, நஷ்டமா என்பதை, விஜய் தான் தேர்வு செய்ய வேண்டும்.

டவுட் தனபாலு: அரசியல் என்பது மக்கள் சேவை என்ற நிலையில் இருந்து, லாபம், நஷ்டம் பார்க்கிற தொழில் மாதிரி ஆகிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை... அதே நேரம் , விஜய் உங்க கூட்டணிக்கு வந்தால், ஆட்சியில் பங்கு கேட்பாரோ என்ற பயத்தில் தான், அவரது வருகையை பழனிசாமி விரும்பலையோ என்ற, 'டவுட்'டும் சேர்ந்தே வருது!

அ.தி.மு.க.,வில் இருந்த போது, தமிழக முதல்வர் பதவி வகித்தவரும், தற்போது முன்னாள் முதல்வரும், தி.மு.க., உறுப்பினருமாக உள்ள பன்னீர்செல்வம்: மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதா, தொலைநோக்குடன் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை, பழனிசாமி முதல்வராக இருந்தபோது நிறுத்தி விட்டார். அ.தி.மு.க.,வை குழி தோண்டி புதைத்தது, அக்கட்சியின் பழனிசாமியும், முன்னாள் அமைச்சர் உதயகுமாரும் தான். என்னை பற்றி பேச அவர்களுக்கு அருகதை இல்லை.

டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் ஜெ., தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை அமல்படுத்தினாங்க... அந்த திட்டத்தால், எத்தனையோ ஏழை பெண்கள் கரையேற்றப்பட்டாங்களே... அந்த திட்டத்தை தி.மு.க., அரசு நிறுத்தியது, உங்க பார்வைக்கு தப்பா படலையா என்ற, 'டவுட்' வருதே!

பத்திரிகை செய்தி: தமிழகத்தில், 22,000 தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த கொடுக்கப் பட்ட, 11 கோடி ரூபாயை, தமிழக பா.ஜ.,வினர் முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலிடம் கொடுத்த, 11 கோடி ரூபாயை முழுமையாக செலவழிக்காமல், பா.ஜ., நிர்வாகிகள், 'ஸ்வாகா' செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மீது, தேசிய தலைவர் நிதின் நபின் அதிருப்தியில் உள்ளார்.

டவுட் தனபாலு: தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, பா.ஜ.,வை கொண்டு வரணும்னு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அயராம பாடுபடுறாங்க... ஆனா, இங்க இருக்கிற பா.ஜ.,வினரோ, திராவிட கட்சியினர் மாதிரியே, 'கட்டிங், கமிஷன்'னு இறங்கிட்டா, அவங்க ரெண்டு பேரின் கனவும் நனவாகுமா என்பது, 'டவுட்'தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us