Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : மார் 17, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2026 01:54 AM

3


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை: தற்போது, தி.மு.க.,வே, அ.தி.மு.க.,வின் பி டீமாக மாறி இருக்கிறது. அங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க.,வில் இருந்தவர்கள் தான். சாத்துார் ராமச்சந்திரன் துவங்கி பன்னீர்செல்வம் வரை பலரும் அங்கு உள்ளனர். அதை வைத்துத்தான் சொல்கிறேன்... தி.மு.க.,வே, அ.தி.மு.க.,வின் 'பி டீம்' தான்.!

டவுட் தனபாலு: நீங்க சொல்வது நுாற்றுக்கு நுாறு உண்மை... தி.மு.க.,வில் இன்று செல்வாக்காகவும், வளமான துறைகளின் அமைச்சர் பதவிகளையும் வகிப்பவங்க, முன்னாள் அ.தி.மு.க.,வினர் என்பதில், 'டவுட்' இல்லை... அதே நேரம், இவங்களால, காலம் காலமாக, தி.மு.க.,வுக்கு உழைச்சவங்க கடும் அதிருப்தியில் இருக்காங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!



தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு: காஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற விவகாரங்களில், மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கூடத் தெரியாமல், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேசி வருகிறார். நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த பழனிசாமிக்கு, எந்த பிரச்னைக்கு, எந்த அதிகார வரம்பில், யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடத் தெரியவில்லை.

டவுட் தனபாலு: காஸ் தட்டுப்பாடு விவகாரத்தில், மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்கணும் என்பதில், 'டவுட்' இல்லை... ஆனா, காஸ் சிலிண்டர்களை பதுக்கி, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதை தடுப்பது மாநில அரசின் பணிதானே... அதுல, தமிழக அரசு அலட்சியமாகவே செயல்படுது என்பதில், 'டவுட்'டே இல்லை!l

தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: தமிழகத்தில் நடக்கும் அனைத்து குற்ற சம்பவங்களிலும், முறையாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சம்பவங்களுக்கு மதுவும், கஞ்சாவும் காரணம் என கூறுகின்றனர். ஆனால், இந்த போதை பொருட்கள் எல்லாம், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் வந்தவை அல்ல!

டவுட் தனபாலு: தமிழகத்தில் நடந்த பெரும்பாலான குற்ற சம்பவங்களின் பின்னணியை எடுத்து பார்த்தால், போதையில் தான் அந்த குற்றங்கள் நடந்தன என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும்... அதன்பிறகும், 'மதுவும், கஞ்சாவும் குற்றங்களுக்கு காரணமில்லை' என நீங்க சொல்றது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us