sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : மார் 13, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2026 03:09 AM

3


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கட்சியினர் மத்தியில், த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு: இனி எனக்கு எல்லாமே அரசியல் தான். குடும்பம், நட்பு என எல்லாவற்றையும் விட்டுட்டு தான் முழு நேரமாக அரசியலில் இறங்கி உள்ளேன். உங்களின் செயல்பாடுகள் தான், த.வெ.க.,வை வெற்றி பெற செய்யும். த.வெ.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள், எல்லா தரப்பிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. அதை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபடுங்கள்.

டவுட் தனபாலு: அரசியல்ல இறங்கினால், நட்பு, குடும்பத்தை எல்லாம் விட்டுட்டு வரணும்னு எந்த சட்டமும் இல்லையே... உங்க சொந்த காரணங்களுக்காக குடும்பத்தையும், நட்பையும் கைகழுவிட்டு, அரசியலுக்காக அதை எல்லாம் தியாகம் செய்தேன்னு சொல்றீங்களே... நீங்க தேர்தலில் ஜெயிக்கிறீங்களோ, இல்லையோ... கைதேர்ந்த அரசியல்வாதி ஆகிட்டீங்க என்பதில் மட்டும், 'டவுட்'டே இல்லை!

lll



த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார்: பா.ஜ.,வுடன் த.வெ.க., கூட்டணி பேச்சு மேற்கொள்கிறது என, பல யூகங்கள் கிளம்புகின்றன. அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, மூன்றாவது முறையாக, வரும் 15ம் தேதி டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்.

டவுட் தனபாலு: 'பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து பேசவில்லை' என, அடித்து சொல்ல மாட்டேங்கிறாரே... இவர் இப்படி மழுப்பலாக பேசுவதும், 15ம் தேதி டில்லிக்கு விஜய் போக இருப்பதும், த.வெ.க., - பா.ஜ., கூட்டணி பற்றி ஏகப்பட்ட, 'டவுட்'களை கிளப்புதே!

lll

தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி: த.வெ.க., தலைவர் விஜய், ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வாங்குகிறார் என த.வெ.க.,வினர் கூறுகின்றனர். தியேட்டர் டிக்கெட்டுகளை, 'பிளாக்'கில் விற்றால்தான், அந்தளவு தொகையை அவர் சம்பளமாக பெற முடியும். ஒரு டிக்கெட் விலை 80 ரூபாய் என்றால், 'பிளாக்'கில் 1,000 ரூபாய்க்கு விற்கின்றனர். அப்படியென்றால், 920 ரூபாய் கருப்பு பணத்தை தான் அவர் சம்பளமாக பெற்றுள்ளார்.

டவுட் தனபாலு: விஜய் படத்தை, 1,000 ரூபாய் கொடுத்து பார்க்கும் அளவுக்கு ரசிகர்கள் இருக்காங்க... உங்க கட்சியின் இளைஞர் அணி தலைவர் உதயநிதியும் ஒருகாலத்தில் சினிமா நடிகரா இருந்தவர் தானே... அவரது படங்களை, 'ஒயிட் டிக்கெட்' அதாவது, 80 ரூபாய் டிக்கெட் எடுத்து பார்க்க யாராவது தயாரா இருந்தாங்களா என்ற, 'டவுட்'டுக்கு தங்களிடம் விடை இருக்குமா?

lll

டவுட் தனபாலு/ 13/03/26 வெள்ளி இதழ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us