Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

PUBLISHED ON : மார் 10, 2026 02:16 AM


Google News
Latest Tamil News
கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி: தமிழக சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி தான் வெற்றி பெறும். அதிக இளைஞர்களை கொண்ட த.வெ.க., இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். அ.தி.மு.க.,வுக்கு இந்த தேர்தல் தான் கடைசி தேர்தலாக இருக்கும்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வுக்கு இது கடைசி தேர்தலா, இல்லையா என்பது இருக்கட்டும்... ஆனா, உதயநிதி முதல்வரானாலும் சரி, அவரது மகன் இன்பநிதியே முதல்வரானாலும் சரி... தி.மு.க., தோளில் ஏறிதான் தமிழக காங்., சவாரி செய்யும் என்பதில் மட்டும் இம்மி அளவு கூட, 'டவுட்' இல்லை!

பத்திரிகை செய்தி: கடந்த 2016 தேர்தலில், அ.தி.மு.க., சார்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜன், 2016 - 2021 வரை சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தார். அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டபோது, அவருடன் சென்றார். தற்போது, பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் இணைந்ததை தொடர்ந்து, பிப்ரவரி 27ல், நடராஜன் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு அ.தி.மு.க.,வில் அமைப்பு செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: 'வெல்லமண்டி நடராஜன் கட்சியில் இருந்து விலகுறப்ப, மாவட்ட செயலரா தான் இருந்தார்... வெளியே போயிட்டு வந்தவருக்கு, மாநில அளவில் பதவி கொடுத்தால் என்ன அர்த்தம்... நாமும் ஒரு சுற்று மாற்று கட்சிக்கு போயிட்டு வந்தா, கட்சியில் பதவி உயர்வு கிடைக்கும்'னு மற்ற அ.தி.மு.க.,வினரும் நினைக்க மாட்டாங்களா என்ற, 'டவுட்' வருதே!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: இன்றைய இளைஞர்கள் மத்தியில், அரசியல் அறிவை விட திரைப்பட மோகம் அதிகமாக இருப்பதற்கு, ஆட்சியாளர்களே காரணம். கல்வி நிறுவனங்களில் அரசியல் பேச தடை விதித்து விட்டு, சினிமா நட்சத்திரங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது ஒரு சமூக சீர்கேடு; இது மாற வேண்டும்.

டவுட் தனபாலு: நீங்களும் கூட சினிமாவில் இருந்து வந்தவர் தானே... இயக்குநர், நடிகர் என்ற விளம்பர வெளிச்சம் இருந்ததால் தானே, அரசியலில் இவ்வளவு வேகமா உங்களால வளர முடிஞ்சிருக்கு... ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல, சினிமா மோகத்தை நீங்களே குறை கூறலாமா என்ற, 'டவுட்'தான் வருது!





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us