sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : மார் 07, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2026 03:05 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலர் அருணாசலம்: சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ம.நீ.ம., எவ்வாறு பலம் சேர்க்கும் என்ற புள்ளி விபரங்களை கொடுத்துள்ளோம். அதை, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக தொகுதி பங்கீடு பேச்சு குழுவினர் தெரிவித்தனர். கோழி முட்டையை அடை காப்பது போல் காத்து, குஞ்சு பொரித்த பின், எத்தனை தொகுதிகள் என்பதை சொல்கிறோம்.

டவுட் தனபாலு: உங்க கட்சியின் பலம் மட்டும் இல்லை என்றால், தி.மு.க., அணி ஜெயிப்பதே கேள்விக்குறியாகிடும்னு நினைக்கிறீங்களோ... 'நெனப்பு தான் பொழப்பை கெடுத்துச்சாம்' என்ற பழமொழிக்கு சரியான உதாரணம் நீங்கதான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

கேரள மாநில பா.ஜ., தலைவர் ராஜீவ் சந்திரசேகர்: நம் பார்லிமென்டில் இருக்கும் போது, வடகொரிய பார்லிமென்டில் இருப்பது போல் உணர்வதாக, காங்., - எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தது கண்டனத்துக்குரியது. நம் பார்லிமென்டின் மதிப்பை அவர் கெடுக்கிறார். வட கொரியாவில் வாழ விருப்பம் இருந்தால், ஜெய்ராம் ரமேஷ், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, நானே விமான டிக்கெட் எடுத்து தருகிறேன்.

டவுட் தனபாலு: வடகொரிய பார்லிமென்ட் பற்றிய பேசியது, ஜெய்ராம் ரமேஷ் தானே... அவருக்கு மட்டும் டிக்கெட் எடுத்து, வடகொரியாவுக்கு அனுப்புறதை விட்டுட்டு, ராகுலையும் கோர்த்து விடுவது ஏன்... ஒரு டிக்கெட் எடுத்தால் இன்னொரு டிக்கெட் இலவசம் என்ற சலுகையில், ராகுலை நாடு கடத்த பார்க்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

lll

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன்: 'இண்டி' கூட்டணியில் இருக்கும் எங்களுக்கு, இந்த முறை சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஒரு வாய்ப்பு தரும் என நினைக்கிறோம். டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வரை பிரசாரத்துக்கு அழைத்து வருவேன். எங்கள் உயரத்துக்கும், தகுதிக்கும் ஏற்ற அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறோம்.

டவுட் தனபாலு: தமிழகத்தில் இருக்கிற கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதிகள் ஒதுக்குறதுக்குள்ளயே தி.மு.க.,வினருக்கு நாக்கு தள்ளிடுச்சு... இதுல, நீங்க வேற குறுக்கே புகுந்து காமெடி பண்றீங்களே... அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர்னு இல்லை... நீங்க, அமெரிக்க அதிபர் டிரம்பையே பிரசாரத்துக்கு அழைச்சிட்டு வந்தாலும், உங்க கட்சிக்கு இதயத்தில் மட்டும் தான் தி.மு.க.,வினர் இடம் தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us