Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

PUBLISHED ON : மார் 02, 2026 01:41 AM


Google News
Latest Tamil News
முன்னாள் முதல்வர், ஜெ.,யின் தோழி சசிகலா: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க.,வில் இணைந்தது மிகவும் துரதிருஷ்டவசமான முடிவு. தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய தீயசக்தியாக, தி.மு.க., இருக்கும் நிலையில், தாய் கழகம் என நினைத்து, தி.மு.க.,வில் சேர்ந்தது அவரது தவறான முடிவு.

டவுட் தனபாலு: அவரும் என்ன தான் பண்ணுவார், பாவம்... கால் கடுக்க காத்திருந்தும், அ.தி.மு.க.,வில் சேர்க்க பழனிசாமி மறுத்துட்டாரு... உங்களை நம்பி வந்தா, முட்டுச்சந்தில் தான் நிற்கணும்... பழுத்த மரத்தில் தான் வவ்வால்கள் தஞ்சம் அடையும் என்பதற்கேற்ப, ஆளுங்கட்சியான, தி.மு.க.,வில் ஐக்கியமாகிட்டாரு... பழைய பஞ்சாங்கத்தை எல்லாம் பார்த்துட்டு இருந்தால், அரசியலில் ஜெயிக்க முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ஆட்சி முடியும் நேரத்தில், அவசர கோலத்தில் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கிறார். கமிஷனுக்காக எல்லா துறைகளிலும், 'டெண்டர்' விடப்படுகிறது. திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல், மக்களை ஏமாற்றும் தந்திர, 'மாடல்' இது. எங்களின், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இப்போதைய தமிழக அரசு, அவசர கோலத்தில் விட்ட அனைத்து டெண்டர்களும் ரத்து செய்யப்படும்.

டவுட் தனபாலு: ஆட்சி முடியும் நேரத்தில், டெண்டர்களை அள்ளி விட்டு, கமிஷன் வாங்குறதும், அடுத்து ஆட்சிக்கு வர்றவங்க 'டெண்டரை ரத்து பண்ணிடுவோம்'னு மிரட்டி, கமிஷன் வாங்கிட்டு, கமுக்கமா இருந்துடுறதையும், காலம் காலமா தமிழகம் பார்த்துட்டு தான் இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி: 'அரசியலில் ஈடுபட மாட்டேன்' என, ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்து, அவருக்கு உதவி செய்வதற்காக வந்தவர் சசிகலா. அ.தி.மு.க.,வினர் ரத்தத்தை உறிஞ்சி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்த குடும்பம் சசிகலா குடும்பம். அவரெல்லாம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீது பழி சுமத்தலாமா... தர்மம் தன் வேலையை செய்ததால் தான், சசிகலா சிறை சென்றார்.

டவுட் தனபாலு: சசிகலா சொத்துக்கள் குவிச்சதை, ஜெ., ஏன் தடுக்கலை... அதனால் தான், சசிகலாவுடன் சேர்ந்து, ஜெ.,யும் ஜெயிலுக்கு போனாங்க... ஜெ., உயிருடன் இருந்திருந்தால், சசிகலாவுடன் சேர்ந்து, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிச்சிருப்பாங்க என்ற வரலாற்றை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us