Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா: தி.மு.க., ஆட்சியில், 98.5 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், 10 சதவீத வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவறான தகவலை கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது பற்றி நேருக்கு நேர் விவாதிக்க, அமித் ஷா தயாரா?

டவுட் தனபாலு: அது சரி... 'அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம், மாதாந்திர மின் கணக்கெடுப்பு, காஸ் சிலிண்டர் விலை குறைப்பு, 3.50 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்' என்ற வாக்குறுதி கள் எல்லாம், இந்த ஒன்றரை சதவீதத்தில் அடங்கிடுமா என்ற, 'டவுட்' வருதே!



தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்தபோது, ராஜ்யசபா 'சீட்' தருவதாக அ.தி.மு.க., சார்பில் உறுதி கூறப்பட்டது. ஆனால், 'எந்த ஆண்டு தரப்படும் என்பது குறித்து சொல்லும் வழக்கம் இல்லை; என் வார்த்தையை நம்புங்கள்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்; அதை ஏற்றுக்கொண்டோம். 2025ல் தரப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், '2026ல் தே.மு.தி.க., வுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும்' என, பழனிசாமி தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்; பொறுத்தார் பூமி ஆள்வார்.

டவுட் தனபாலு: சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத உங்க கட்சிக்கு, 36 எம்.எல்.ஏ.,க் கள் ஓட்டளிக்கக்கூடிய ராஜ்யசபா எம்.பி., பதவியை சும்மா துாக்கி தருவாங்களா...? வர்ற சட்டசபை தேர்தல்ல உங்க கட்சியிலும் கணிசமான எம்.எல்.ஏ.,க்கள் ஜெயித்து, சட்டசபைக்கு போனால்தான் ராஜ்யசபா சீட் தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!



தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி: சென்னை, தாம்பரம் அரசு சேவை இல்லத்தில், மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில், குற்றவாளி உடனே கைது செய்யப்பட்டுள்ளார். விடுதியில் இருந்த, 100-க்கும் மேற்பட்ட மாணவியர் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என, தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது; இதில், யாரும் பாதிக்கப்படவில்லை. மேலும், அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க, அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார்.

டவுட் தனபாலு: அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் கொடுமை நடந்த பின் தான், அங்க பெண் காவலாளிகளை பணியில் அமர்த்தணும் என்ற யோசனையே அரசுக்கு வந்திருக்குதா... அந்த பெண் காவலாளிகளுக்காவது முழு பாதுகாப்பை இந்த அரசால தர முடியுமா என்ற, 'டவுட்'தான் வருது!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us