சாய் கார்டன் பூங்கா சீரமைப்பு பணி
சாய் கார்டன் பூங்கா சீரமைப்பு பணி
சாய் கார்டன் பூங்கா சீரமைப்பு பணி
PUBLISHED ON : செப் 11, 2025 12:00 AM

வாலாஜாபாத்:நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, வாலாஜாபாத், ஸ்ரீசாய் கார்டன் பூங்காவில் 'குடி'மகன்கள் பயன்படுத்திய மது பாட்டில்கள் மற்றும் குப்பை அகற்றப்பட்டு, சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
வாலாஜாபாத் பேரூராட்சி, சேர்க்காடு சாலையில் ஸ்ரீசாய் கார்டன் சிறுவர் பூங்கா உள்ளது.
இதில், சிறுவர் முதல் பெரியோர் வரை உடற்பயிற்சி செய்தல் மற்றும் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
இந்த பூங்காவில் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் 'குடி'மகன்கள், மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், காலி மது பாட்டில்களை அங்கேயே உடைத்தும், பிளாஸ்டிக் குப்பையை குவித்தும் சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால், அங்குள்ள குடியிருப்பு வாசிகள் பல வகையில் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து, நேற்று முன்தினம் நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அதன் தொடர்ச்சியாக வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கையின்படி, காலி பாட்டில், பிளாஸ்டிக் குப்பை மற்றும் 'குடி'மகன்கள் அமைத்த கூடாரம் போன்றவை அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது.