/தினம் தினம்/செய்தி எதிரொலி/ நிழற்குடையை ஆக்கிரமித்த கார் அகற்றம் நிழற்குடையை ஆக்கிரமித்த கார் அகற்றம்
நிழற்குடையை ஆக்கிரமித்த கார் அகற்றம்
நிழற்குடையை ஆக்கிரமித்த கார் அகற்றம்
நிழற்குடையை ஆக்கிரமித்த கார் அகற்றம்
PUBLISHED ON : மே 26, 2025 12:00 AM

சென்னை:கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு கே.கே.நகர் முனுசாமி சாலையில், அமுதம் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இங்குள்ள பயணியர் நிழற்குடையில், விபத்திற்குள்ளான, 'ஹூண்டாய் சான்ட்ரோ' கார், ஒரு மாத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்தது.
நிழற்குடையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள காரால், பயணியர் இருக்கைகளில் அமர வழியின்றி, நீண்ட நேரம் நிற்கும் அவல நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, மாநகராட்சியும், காவல்துறையினரும் கண்டுக்கொள்ளாதது குறித்து, நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து, தற்போது விபத்துக்குள்ளான காரை போலீசார், மாநகராட்சி உதவியுடன் அகற்றி உள்ளனர். நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் தவித்த பயணியர், நிம்மதி அடைந்துள்ளனர்.