/தினம் தினம்/செய்தி எதிரொலி/பயணியர் நிழற்குடையில் புதர்கள் அகற்றம்பயணியர் நிழற்குடையில் புதர்கள் அகற்றம்
பயணியர் நிழற்குடையில் புதர்கள் அகற்றம்
பயணியர் நிழற்குடையில் புதர்கள் அகற்றம்
பயணியர் நிழற்குடையில் புதர்கள் அகற்றம்
PUBLISHED ON : ஜன 13, 2024 12:00 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, நுங்கம்பாக்கம் ஊராட்சி. இங்கு, 15 ஆண்டுகளுக்கு முன், மப்பேடு செல்லும் சாலையில், ஏரிக்கரை அருகே, 2004 --- 05ம் ஆண்டு கட்டப்பட்ட ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் மற்றும் பயணியர் நிழற்குடையை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் முறையான பராமரிப்பில்லாததால் பயன்பாடில்லாத நிழற்குடை மற்றும் சுகாதார வளாகம் புதர்கள் வளர்ந்து மோசமான நிலையில் இருந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நுாறு நாள் திட்ட பணியாளர்கள் மூலம் புதர்களை அகற்றி சீரமைத்தனர்.