/தினம் தினம்/செய்தி எதிரொலி/ ரயில்வே ஸ்டேஷன் பிழையுடன் இருந்த பெயர் பலகை அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி ரயில்வே ஸ்டேஷன் பிழையுடன் இருந்த பெயர் பலகை அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
ரயில்வே ஸ்டேஷன் பிழையுடன் இருந்த பெயர் பலகை அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
ரயில்வே ஸ்டேஷன் பிழையுடன் இருந்த பெயர் பலகை அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
ரயில்வே ஸ்டேஷன் பிழையுடன் இருந்த பெயர் பலகை அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஜூன் 09, 2025 12:00 AM

பொள்ளாச்சி ; 'தினமலர்' செய்தி எதிரொலியாக, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், தமிழில் எழுத்துப்பிழையுடன் வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றப்பட்டது.
மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் சந்திப்பு அல்லது ஸ்டேஷன்களை தொலைநோக்கு பார்வையில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில், பயணியருக்கான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறைகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர் வழங்கல், குளிரூட்டப்பட்ட பயணியர் காத்திருப்பு அறை, ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன.
மாற்றுத்திறன் பயணியருக்கு வசதி ஏற்படுத்துதல், வாகன காப்பிடம் மற்றும் தேவையான கட்டடங்கள் கட்டப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 1,275 ரயில்வே ஸ்டேஷன்களை நவீனமயமாக்கி மேம்படுத்தப்படுகிறது. அதில், பாலக்காடு கோட்டத்துக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் மறு சீரமைப்பு செய்தல், 7.75 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது முகப்பு பகுதி முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, பொள்ளாச்சி ஜங்ஷன் என தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டது.
மும்மொழியில் இருந்த, 'பொள்ளாச்சி ஜங்ஷன்' என்ற வார்த்தை, தமிழில், 'ஜங்' என எழுதுவதற்கு பதிலாக, 'ஜ்' என எழுத்துப்பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து, கடந்த, 4ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
செய்தியை அடிப்படையாக கொண்டு, பாலக்காடு கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ஆனந்தகுமார், பாலக்காடு ரயில்வே அதிகாரிகளுக்கு எழுத்துப்பிழையை மாற்ற வலியுறுத்தினார்.
அதிகாரிகள், எழுத்துப்பிழையுடன் இருந்த பெயர் பலகையை நேற்று முதற்கட்டமாக அகற்றியுள்ளனர். இதற்கு மாற்றாக, மற்ற ஊர்களில் உள்ளது போன்று, தமிழில் பொள்ளாச்சி சந்திப்பு என குறிப்பிட வேண்டும், என, ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.