Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/செய்தி எதிரொலி/ நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு; தினமலர் செய்தி எதிரொலி

நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு; தினமலர் செய்தி எதிரொலி

நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு; தினமலர் செய்தி எதிரொலி

நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு; தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : மே 31, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
பெண்ணாடம் : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி காரணமாக, பெண்ணாடம் பகுதியில் கருகி வரும் குறுவை நெல் வயல்களை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள அரியராவி, மாளிகைக்கோட்டம், திருமலை அகரம், இருளம்பட்டு, கொசப்பள்ளம், இறையூர், கொத்தட்டை, பெ.கொல்லத்தங்குறிச்சி, துறையூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் நடவு செய்தனர்.

நெற்பயிர்களும் செழிப்பாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நெற்பயிர்களின் நுனி பகுதியில் மஞ்சள் நிற மர்மநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் பாதிக்கும் என்பதால் பெண்ணாடம் பகுதி குறுவை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து, கடந்த 29ம்தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

அதைத்தொடர்ந்து, விருத்தாசலம் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமையில் நல்லூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கீதா, உதவி வேளாண்மை அலுவலர்கள் கவிதா, திருவேங்கடம் ஆகியோர் கொண்ட குழுவினர் மஞ்சள் நோய் பாதித்த குறுவை நெல் வயல்களை பார்வையிட்டனர்.

அப்போது, பயிரின் நுனி பகுதி காய்ந்து மஞ்சள் நிறமாக மாறியதற்கு பாக்டீரியா இலை கருகல் நோய் காரணம் எனவும், அதனை கட்டுப்படுத்த காப்பர் ஹைட்ராக்சைடு மருந்தை ஏக்கருக்கு 400 கிராமுடன் புரப்பனோபாஸ் 250 மி.லி., திரவத்துடன் கலந்து பயிர்களுக்கு தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us