/தினம் தினம்/செய்தி எதிரொலி/மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நாங்களத்துாரில் புதிதாக அமைப்புமேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நாங்களத்துாரில் புதிதாக அமைப்பு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நாங்களத்துாரில் புதிதாக அமைப்பு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நாங்களத்துாரில் புதிதாக அமைப்பு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நாங்களத்துாரில் புதிதாக அமைப்பு
PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM

செய்யூர்:செய்யூர் அருகே சித்தாற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நாங்களத்துார் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
குடியிருப்பு பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் இருந்து, குழாய்களின் வாயிலாக கிராம மக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, தண்ணீர் கசிவு ஏற்பட்டது.
இதனால், நாளடைவில் குடிநீர் தொட்டி இடிந்து, தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 17 லட்சம் ரூபாயில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க 'டெண்டர்' விடப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.