/தினம் தினம்/செய்தி எதிரொலி/ காட்டுப்பன்றியை பிடிக்க வைச்சாச்சு கூண்டு... தினமலர் செய்தி எதிரொலி காட்டுப்பன்றியை பிடிக்க வைச்சாச்சு கூண்டு... தினமலர் செய்தி எதிரொலி
காட்டுப்பன்றியை பிடிக்க வைச்சாச்சு கூண்டு... தினமலர் செய்தி எதிரொலி
காட்டுப்பன்றியை பிடிக்க வைச்சாச்சு கூண்டு... தினமலர் செய்தி எதிரொலி
காட்டுப்பன்றியை பிடிக்க வைச்சாச்சு கூண்டு... தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : செப் 10, 2025 12:00 AM

பெ.நா.பாளையம்; 'தினமலர்' செய்தி எதிரொலியாக சோமையனூரில் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் வேளாண் நிலங்களில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான பயிர்கள் சேதம் அடைகின்றன.
வன எல்லை பகுதியிலிருந்து, 3 கி. மீ.,க்கு உட்பட்ட பகுதியில் மேயும் காட்டு பன்றிகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும். 3 கி.மீ., கடந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம்இருந்தால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவற்றை சுட்டு பிடிக்க வேண்டும் என, தமிழக அரசு சட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதுவரை சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இது குறித்து, நேற்று தினமலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து கோவை வனத்துறையினர் தடாகம் ரோடு, சோமையனூரில் உள்ள விவசாயி நடராஜ் தோட்டத்தில்காட்டுப் பன்றிகளை பிடிக்க பத்துக்கு பத்து நீள, அகலம் உள்ள, 5 அடி உயரமுள்ள ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் இரும்புக்கூண்டை கொண்டு வந்து வைத்துள்ளனர். இது குறித்து சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் பிரபு கூறுகையில், தடாகம் வட்டாரத்தில் வன எல்லை பகுதியிலிருந்து 3 கி.மீ.,க்குள் பெரும்பாலான தோட்டப்பகுதிகள் உள்ளன.
எனவே காட்டுப் பன்றிகளை கூண்டு வைத்து பிடிப்பது மட்டுமே இப்பகுதியில் சாத்தியம். இதே போல மற்ற இடங்களிலும் கூண்டு வைத்து காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.