/தினம் தினம்/செய்தி எதிரொலி/ ‛தினமலர்' செய்தி எதிரொலி: பெரும்பாக்கத்தில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் ‛தினமலர்' செய்தி எதிரொலி: பெரும்பாக்கத்தில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்
‛தினமலர்' செய்தி எதிரொலி: பெரும்பாக்கத்தில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்
‛தினமலர்' செய்தி எதிரொலி: பெரும்பாக்கத்தில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்
‛தினமலர்' செய்தி எதிரொலி: பெரும்பாக்கத்தில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்
PUBLISHED ON : ஜூன் 14, 2024 12:00 AM

சென்னை : பெரும்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 50,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 18,000 வாக்காளர்களுக்கு மட்டுமே ஓட்டு இருந்தது.
மீதமுள்ள, 32,000 பேருக்கு ஓட்டு இல்லை. இங்கு வசிப்பவர்கள், மறுகுடியமர்வு செய்யப்பட்டபோது, ஏற்கனவே அவர்கள் வசித்த பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர்கள் நீக்கப்பட்டன.
இதுகுறித்து நம் நாளிதழில், கடந்த ஏப்ரல் மாதம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டார்.
தேர்தல் முடிந்ததும், விடுபட்டவர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.
இதைத் தொடர்ந்து, இன்றும், நாளையும் பெரும்பாக்கம், 9வது குடியிருப்பு வளாகத்தில், வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மேலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட சேவைகளுக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பங்கேற்பர் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.