/தினம் தினம்/செய்தி எதிரொலி/ அண்ணா சாலையில் வைத்த பேனர்கள் அதிரடி அகற்றம் அண்ணா சாலையில் வைத்த பேனர்கள் அதிரடி அகற்றம்
அண்ணா சாலையில் வைத்த பேனர்கள் அதிரடி அகற்றம்
அண்ணா சாலையில் வைத்த பேனர்கள் அதிரடி அகற்றம்
அண்ணா சாலையில் வைத்த பேனர்கள் அதிரடி அகற்றம்
PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM

சென்னை, நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, அண்ணா சாலையில் அத்துமீறி வைக்கப்பட்ட பேனர்களை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.
அண்ணா சாலை, சிம்சன் சிக்னல் அருகே, பறக்கும் ரயில் மேம்பாலத்தில், தனியார் சார்பில் பேனர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து நம் நாளிதழில், மே மாதம் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, மாநகராட்சியினர் பேனர்களை அகற்றினர்.
இந்நிலையில், அகற்றிய இடத்தில் இரண்டு மாதத்திற்குள், மீண்டும் தனியார் நிறுவனத்தினர் பேனர்களை அமைத்தனர். இதுகுறித்து நேற்று, நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள், பேனர்களை நேற்று அகற்றினர்.
இருப்பினும், பேனர் அமைத்த இரும்பு சட்டங்களை மாநகராட்சியினர் அகற்றவில்லை.
இதனால் மீண்டும் அதே இடத்தில் பேனர்கள் வைக்க வாய்ப்புள்ளதால், இரும்பு சட்டங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.