PUBLISHED ON : ஜூன் 05, 2024 12:00 AM

கொட்டாம்பட்டி, : கருங்காலக்குடியில் இருந்து சிங்கம்புணரிக்கு பெரியாறு நீட்டிப்பு கால்வாயை கடந்து செல்வதற்கான பாலம் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிந்தது.
வாகனங்கள் செல்லும் போது பாலம் அதிர்ந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக புதிதாக பாலம் கட்டப்பட்டது.