/தினம் தினம்/செய்தி எதிரொலி/ 'தினமலர்' செய்தியால் ஆக்கிரமிப்பு அகற்றம் 'தினமலர்' செய்தியால் ஆக்கிரமிப்பு அகற்றம்
'தினமலர்' செய்தியால் ஆக்கிரமிப்பு அகற்றம்
'தினமலர்' செய்தியால் ஆக்கிரமிப்பு அகற்றம்
'தினமலர்' செய்தியால் ஆக்கிரமிப்பு அகற்றம்
PUBLISHED ON : ஜூலை 15, 2024 12:00 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழைய கட்டடங்களை அப்புறப்படுத்தி. அப்பகுதியில் பிணவறை அமைக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மருத்துவமனை முன்பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் முன்பகுதியில் இருந்த சுற்றுச்சுவரை சேதப்படுத்திய சிலர், பிரேத பரிசோதனை அறைக்கான கட்டுமானம் நடக்கும் பகுதியில் தகர கொட்டகை போட்டு ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு முயற்சி குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். சேதப்படுத்திய சுற்றுச்சுவரை சரிசெய்து, ஆக்கிரமித்து இருந்த தகர கொட்டகையும் அப்புறப்படுத்தினர்.