/தினம் தினம்/செய்தி எதிரொலி/ சத்துணவு சமையலறை திறப்பு; பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி: 'தினமலர்' செய்தி எதிரொலி சத்துணவு சமையலறை திறப்பு; பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி: 'தினமலர்' செய்தி எதிரொலி
சத்துணவு சமையலறை திறப்பு; பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி: 'தினமலர்' செய்தி எதிரொலி
சத்துணவு சமையலறை திறப்பு; பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி: 'தினமலர்' செய்தி எதிரொலி
சத்துணவு சமையலறை திறப்பு; பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி: 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஜூலை 12, 2024 12:00 AM

உடுமலை : குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சுற்றுப்பகுதி கிராமங்களைச்சேர்ந்த 75க்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
அங்கு படிப்பவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ், உணவு தயாரிக்க, பயன்பாட்டில் இருந்த கட்டடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது.
இதையடுத்து, கடந்த, 2021 - 22ம் ஆண்டில், சிறப்பு நிதி திட்டத்தின் கீழ், புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தால், டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தன.
ஆனால், பணிகள் நிறைவு பெற்றும், இருப்பு அறையுடன் கூடிய சமையலறை திறக்கப்படாமல், காட்சிப்பொருளாக இருந்தது. இதனால், பெற்றோர் அதிருப்தியில் இருந்தனர். இதுகுறித்து, ஜூன் 25ல், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, சமையலறை கட்டடத்தில் ஆய்வு செய்த குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள், நிலுவையிலுள்ள பணிகளை விரைவுபடுத்தினர். பணிகள் நிறைவு பெற்று, சத்துணவு சமையலறை தற்போது பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிய கட்டடத்தில், மாணவ, மாணவியருக்கான சத்துணவு சமைக்கப்படுகிறது. இதற்கு, பெற்றோர் உட்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.