/தினம் தினம்/செய்தி எதிரொலி/ தினமலர் செய்தி எதிரொலி: புதிய வகுப்பறை கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வந்தன தினமலர் செய்தி எதிரொலி: புதிய வகுப்பறை கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வந்தன
தினமலர் செய்தி எதிரொலி: புதிய வகுப்பறை கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வந்தன
தினமலர் செய்தி எதிரொலி: புதிய வகுப்பறை கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வந்தன
தினமலர் செய்தி எதிரொலி: புதிய வகுப்பறை கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வந்தன
PUBLISHED ON : ஜூலை 19, 2024 12:00 AM

திருவள்ளூர் : கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சியில் 2022- -2023 ஆண்டு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் 28 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் நேற்று முன்தினம் திறப்பு விழா நடத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வருவதாக இருந்தது.
இந்நிலையில் பள்ளி திறப்பு விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து நேற்று கடம்பத்துார் ஒன்றியத்தில் வெங்கத்துார் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் மணவாளநகர் கே.ஈ.என்.சி. நடேசன் செட்டியார் அரசு மேல்நிலையில் 2023- -24ம் ஆண்டு நபார்டு திட்டத்தில் 1.27 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் 6 வகுப்பறைகள் அடங்கிய பள்ளி கட்டடம் நேற்று திறப்பு விழா நடத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த இரு பள்ளி கட்டடங்களையும் நேற்று கடம்பத்துார் பா.ம.க., ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், யோகானந்தம் முன்னிலையில் கடம்பத்துார் தி.மு.க., ஒன்றியக்குழு உறுப்பினர் திராவிட பக்தன் தலைமை வகித்து திறந்து வைத்தார்.
இதில் கடம்பத்துார் பி.டி.ஓ.,க்கள், வெங்கத்துார் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 11 கோடியே 69 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 70 வகுப்பறைகள் மற்றும் ஆவடியில் 2 கோடி ரூபாய் மதிப்பில் தகைசால் பள்ளி சீரமைப்பு என மொத்தம் 13 கோடியே 66 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வகுப்பறை கட்டங்கள் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது என திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துளளார்.