/தினம் தினம்/செய்தி எதிரொலி/ தலைவர்கள் சிலை திறப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி தலைவர்கள் சிலை திறப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி
தலைவர்கள் சிலை திறப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி
தலைவர்கள் சிலை திறப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி
தலைவர்கள் சிலை திறப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஜூன் 24, 2024 12:00 AM

கடலுார்:
கடலுாரில் லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிந்தும் மூடி வைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகள் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக மீண்டும் திறக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக கடலுார் மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. அரசியல் தலைவர்களின் சிலைகள் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக துணிகளால் மூடப்பட்டு மறைக்கப்பட்டன.
கடந்த 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்து 6ம் தேதி தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால், கடலுார் மஞ்சக்குப்பத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள் மூடியே இருந்தது.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, மஞ்சக்குப்பத்தில் திறக்கப்படாமல் இருந்த தலைவர்களின் சிலைகள் மீண்டும் திறக்கப்பட்டது.