/தினம் தினம்/செய்தி எதிரொலி/ ஆத்துப்பாக்கத்தில் சுடுகாடு சீரமைப்பு ஆத்துப்பாக்கத்தில் சுடுகாடு சீரமைப்பு
ஆத்துப்பாக்கத்தில் சுடுகாடு சீரமைப்பு
ஆத்துப்பாக்கத்தில் சுடுகாடு சீரமைப்பு
ஆத்துப்பாக்கத்தில் சுடுகாடு சீரமைப்பு
PUBLISHED ON : ஜூன் 22, 2024 12:00 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில், ராஜாபாளையம் நோக்கி செல்லும் சாலையோரம் சுடுகாடு உள்ளது. ஆத்துப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க தவறியதால், சுடுகாடு மற்றும் தகன மேடை பகுதி முழுதும் புதர்கள் மண்டி இருப்பதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதையடுத்து ஆத்துப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர், புதர்களை அகற்றி துப்புரவு பணிகள் மேற்கொண்டு சுடுகாட்டை சீரமைத்தனர்.