/தினம் தினம்/செய்தி எதிரொலி/ பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் காலி மது பாட்டில்கள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் காலி மது பாட்டில்கள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி
பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் காலி மது பாட்டில்கள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி
பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் காலி மது பாட்டில்கள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி
பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் காலி மது பாட்டில்கள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஜூலை 29, 2024 12:00 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை பகுதியில் மது பிரியர்கள் விட்டுச் சென்ற, காலி மது பாட்டில்கள் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டன.
ஆனந்துார் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள கழிப்பறை கழிப்பறையை கடந்த சில மாதங்களாக ஊராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்கவில்லை. மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வந்ததுடன், காலி மது பாட்டில்களையும், கழிப்பறையில் கிடந்தன. துர்நாற்றத்தால் பயணிகள் பாதிப்படைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் சில தினங்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியானது.
இதன்காரணமாக ஊராட்சி பணியாளர்கள் நேற்று கழிப்பறையில் கிடந்த இருந்த காலி மது பாட்டில்களை அகற்றி, கழிப்பறை பகுதிகளை சுத்தம் செய்தனர்.