/தினம் தினம்/செய்தி எதிரொலி/ வடுகபட்டியில் குடிநீர் வினியோகம் சீரானது தினமலர் செய்தி எதிரொலி வடுகபட்டியில் குடிநீர் வினியோகம் சீரானது தினமலர் செய்தி எதிரொலி
வடுகபட்டியில் குடிநீர் வினியோகம் சீரானது தினமலர் செய்தி எதிரொலி
வடுகபட்டியில் குடிநீர் வினியோகம் சீரானது தினமலர் செய்தி எதிரொலி
வடுகபட்டியில் குடிநீர் வினியோகம் சீரானது தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஜூலை 25, 2024 12:00 AM
பெரியகுளம்: வடுகபட்டிக்கு, வைகை அணை கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் தட்டுப்பாடு நீங்கியது.
பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தாமரைக்குளம் கண்மாயில் போர்வெல் அமைத்தும், சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து 3 மேல்நிலைத் தொட்டியில் இருந்து தினமும் 13 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 8 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. 10 நாட்களாக வைகை அணை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் சப்ளை செய்யவில்லை. இதனால் வடுகபட்டியில் கடந்த ஆறு நாள் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இது குறித்த தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இச் செய்தி எதிரொலியாக வைகை அணை கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து 8 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது.