/தினம் தினம்/செய்தி எதிரொலி/ தினமலர் செய்தி எதிரொலி ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல் இரு வடமாநில தொழிலாளர்கள் கைது தினமலர் செய்தி எதிரொலி ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல் இரு வடமாநில தொழிலாளர்கள் கைது
தினமலர் செய்தி எதிரொலி ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல் இரு வடமாநில தொழிலாளர்கள் கைது
தினமலர் செய்தி எதிரொலி ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல் இரு வடமாநில தொழிலாளர்கள் கைது
தினமலர் செய்தி எதிரொலி ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல் இரு வடமாநில தொழிலாளர்கள் கைது
PUBLISHED ON : ஜூலை 15, 2024 12:00 AM

தொண்டாமுத்தூர்:தினமலர் செய்தி எதிரொலியாக, தொண்டாமுத்தூரில், போதை பவுடர் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, போதை பவுடரையும் பறிமுதல் செய்தனர்.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், சுமார், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர், பாக்கு ஷெட் மற்றும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, பாக்கு உரிக்கும் வேலைக்கும், கட்டட வேலைக்கும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வடமாநில தொழிலாளர்களில் சிலர், கடந்த சில ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக போதை பவுடரை, இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் போதை பவுடர் புழக்கம் அதிகரித்து, வடமாநில தொழிலாளர்களும், உள்ளூர் இளைஞர்களும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இதுகுறித்து, நமது நாளிதழில் கடந்த, 10ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தொண்டாமுத்தூரில், போதை பவுடர் விற்பனையில் ஈடுபட்டிருந்த, அசாம் மாநிலத்தை சேர்ந்த அசார் இஸ்லாம்,24 மற்றும் அனார் உசேன்,28 ஆகிய இருவரையும் தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 3 கிராம் போதை பவுடரையும், போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
போதை பவுடருக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கை தொடர வேண்டும் என, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.