Dinamalar-Logo
Dinamalar Logo

/தினம் தினம்/செய்தி எதிரொலி/ பூத்துறை - வழுதாவூர் சாலை சந்திப்பு வரை 1,350 மீட்டருக்கு புதிய தார் சாலை பணி நிறைவு பூத்துறை - வழுதாவூர் சாலை சந்திப்பு வரை 1,350 மீட்டருக்கு புதிய தார் சாலை பணி நிறைவு தினமலர் செய்தி எதிரொலி

பூத்துறை - வழுதாவூர் சாலை சந்திப்பு வரை 1,350 மீட்டருக்கு புதிய தார் சாலை பணி நிறைவு பூத்துறை - வழுதாவூர் சாலை சந்திப்பு வரை 1,350 மீட்டருக்கு புதிய தார் சாலை பணி நிறைவு தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஜூன் 08, 2024 12:00 AM

Google News
Latest Tamil News
வானுார் : 'தினமலர்' செய்தி எதிரொலியால், பூத்துறையில் இருந்து வழுதாவூர் சாலை சந்திப்பு வரை 1,350 மீட்டர் வரை தார் சாலை போடப்பட்டுள்ளது.

வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து, பூத்துறை வழியாக, ஊசுடு (புதுச்சேரி - வழுதாவூர் ரோடு) வரையிலான சாலை 7 கி.மீ., துாரத்தை கொண்டுள்ளது. இதில், 5 கி.மீ., துார சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை வசமும், எஞ்சிய 2 கி.மீ., துார சாலை ஊராட்சியிடமும் உள்ளது.

இந்த சாலையில் உள்ள மணவெளி, பட்டானுார், காசிப்பாளையம், பூத்துறை ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதி மக்கள் பூத்துறை சாலை வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் அய்யங்குட்டிப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

மேலும், இந்த சாலை வழியாக பெரம்பை, வில்லியனுார் மற்றும் விழுப்புரத்திற்கு விரைவாக செல்ல முடியும் என்பதால், தினசரி ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து மிகுந்த இந்த சாலை குண்டும், குழியுமாகி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.அதனையொட்டி, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து பூத்துறை வரை 5 கி.மீ., துாரத்திற்கு, 5.50 மீட்டர் சாலையாக மாற்றும் விரிவாக்க பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அதில், கூட்ரோட்டில் இருந்து காசிப்பாளையம் வரை சாலை முழுமையாக போடப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியில் கல்வெர்ட் மற்றும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அதேபோன்று பூத்துறையில் இருந்து வழுதாவூர் சாலை சந்திப்பு வரை எஞ்சிய 2 கி.மீ., துார ஊராட்சி சாலையும் படுமோசமானது. மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் நபார்டு உதவியோடு ரூ.78.25 லட்சம் மதிப்பீட்டில் 650 மீட்டர் இடைவெளி விட்டு, 1,350 மீட்டர் துாரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது.

சாலையில் கருங்கற்கள் கொட்டி நிரப்பிய பின், கிரஷர் மற்றும் ஜல்லி கலந்து கொட்டி பொக்லைன் மூலம் சமன் செய்தனர். பணி துவங்கிய ஒரு வாரத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த 29ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.

அதனையடுத்து, தேர்தல் முடிந்த கையோடு, தற்போது புதிய தார் சாலை போடப்பட்டுள்ளது.

இந்த சாலையின் இடையில் 650 மீட்டர் துாரத்திற்கு நபார்டு மூலம் நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் சாலை அமைக்கப்பட உள்ளது.

வானுார், ஜூன் 8-

'தினமலர்' செய்தி எதிரொலியால், பூத்துறையில் இருந்து வழுதாவூர் சாலை சந்திப்பு வரை 1,350 மீட்டர் தார் சாலை போடப்பட்டுள்ளது.

வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து, பூத்துறை வழியாக, ஊசுடு (புதுச்சேரி - வழுதாவூர் ரோடு) வரையிலான சாலை 7 கி.மீ., துாரத்தை கொண்டுள்ளது. இதில், 5 கி.மீ., துார சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை வசமும், எஞ்சிய 2 கி.மீ., துாரம் ஊராட்சியிடமும் உள்ளது.

இந்த சாலையில் உள்ள மணவெளி, பட்டானுார், காசிப்பாளையம், பூத்துறை ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதி மக்கள் பூத்துறை சாலை வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் அய்யங்குட்டிப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

மேலும், இந்த சாலை வழியாக பெரம்பை, வில்லியனுார் மற்றும் விழுப்புரத்திற்கு விரைவாக செல்ல முடியும் என்பதால், தினசரி ஏராளமான வாகன ஓட்டிகள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

பிசியான இந்த சாலை குண்டும், குழியுமாகி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.அதனையொட்டி, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து பூத்துறை வரை 5 கி.மீ., துாரத்திற்கு, 5.50 மீட்டர் சாலையாக மாற்றும் விரிவாக்க பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அதில், கூட்ரோட்டில் இருந்து காசிப்பாளையம் வரை சாலை முழுமையாக போடப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியில் கல்வெர்ட் மற்றும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அதேபோன்று பூத்துறையில் இருந்து வழுதாவூர் சாலை சந்திப்பு வரை எஞ்சிய 2 கி.மீ., துார ஊராட்சி சாலையும் படுமோசமானது. மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் நபார்டு உதவியோடு ரூ.78.25 லட்சம் மதிப்பீட்டில் 650 மீட்டர் இடைவெளி விட்டு, 1,350 மீட்டர் துாரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் துவங்கியது.

சாலையில் கருங்கற்கள் கொட்டி நிரப்பிய பின், கிரஷர் மற்றும் ஜல்லி கலந்து கொட்டி பொக்லைன் மூலம் சமன் செய்தனர். பணி துவங்கிய ஒரு வாரத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அவை கிடப்பில் போடப்பட்டது.

இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த 29ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.

அதனையடுத்து, தேர்தல் முடிந்த கையோடு, தற்போது புதிய தார் சாலை போடப்பட்டுள்ளது.

மேலும் இடைப்பட்ட 650 மீட்டர் துாரத்திற்கு நபார்டு மூலம் நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் சாலை அமைக்கப்பட உள்ளது.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us