PUBLISHED ON : ஜூன் 28, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பாதிக்கும் கடல் வளம்
கார்பன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களால் நீர்நிலைகள் பெரிதும் பாதிக்கிறது என நாசா தெரிவித்துள்ளது. பூமி 70 சதவீதம் நீரால் சூழப்பட்டது. பருவநிலையை தக்க வைப்பதில் கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மனிதர்களின் நடவடிக்கையால் கடல் வளம் முன்புபோல தற்போது இல்லை என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். செயற்கைக்கோள் தரவுகளை வெளியிட்ட நாசா, கடலில் எந்தெந்த பகுதியில் வெப்பநிலை எப்படி உள்ளது என விவரித்துள்ளது. இதில் பெரும்பாலானவை வெப்பநிலை அதிகரித்த பகுதியாக உள்ளது.
தகவல் சுரங்கம்
மின்சார உற்பத்தியில் 'டாப்'
புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் சோலார் (சூரிய ஒளி) முக்கிய பங்குவகிக்கிறது. உலகின் பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் சீனாவின், ஜின்ஜியாங் மாகாண பாலைவன பகுதியில் உள்ளது. பரப்பளவு 2 லட்சம் ஏக்கர். இங்கு 5 ஜிகாவாட் (1 ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட்) மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது இடத்தில் இந்தியாவின் 'பட்லா சோலார் பார்க்' உள்ளது. ராஜஸ்தானின் தார் பாலைவனப்பகுதியில் 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2.7 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.