PUBLISHED ON : ஜூலை 15, 2024 12:00 AM

பூச்சிகளை உண்ணும் தாவரம்
அமெரிக்காவின் கரோலினா மாகாணம் உட்பட அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் காணப்படும் தாவரம் 'வீனஸ் பிளைடிராப்'. பூச்சிகளை உண்ணும் தாவர வகையை சேர்ந்தது. இது அழிந்து வரும் தாவரங்களின் பட்டியலில் உள்ளது. 1759ல் ஏப். 2ல் வடக்கு கரோலினா கவர்னர் ஆர்துர் டூப்ஸ், இத்தாவரத்தை பற்றி எழுதினார். இதன் ஒவ்வொரு செடியிலும் 7 - 10 இலை இருக்கும். ஈரமான, நீர்த்தேக்க பகுதிகளில் வளர்கின்றன. பூச்சி, எறும்பு, சிலந்தி, வண்டு, வெட்டுக்கிளி உள்ளிட்டவை இதன் இலையில் அமர்ந்தால், உடனே இலையை மூடி உணவாக்கி விடும்.