/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்: பூமியின் வெப்பமான நாள் அறிவியல் ஆயிரம்: பூமியின் வெப்பமான நாள்
அறிவியல் ஆயிரம்: பூமியின் வெப்பமான நாள்
அறிவியல் ஆயிரம்: பூமியின் வெப்பமான நாள்
அறிவியல் ஆயிரம்: பூமியின் வெப்பமான நாள்
PUBLISHED ON : ஜூலை 27, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பூமியின் வெப்பமான நாள்
உலகின் சராசரி வெப்பநிலை இதுவரை இல்லாத அளவாக ஜூலை 21ல் 17.09 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது என ஐரோப்பாவின் 'சி3எஸ்' நிறுவனம் அறிவித்த நிலையில் அடுத்தநாளே ஜூலை 22ல் 17.15 டிகிரி செல்சியசாக உச்சம் தொட்டது. இதற்குமுன் 2023 ஜூலை 6ல் 17.08 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. 1940ல் இருந்து உலக சராசரி வெப்பநிலை அளவிடப்படுகிறது. 50 ஆண்டுகளில் பதிவான 'டாப் - 10' வெப்பநிலை 2015க்கு மேல் பதிவாகியுள்ளது. இதிலிருந்து உலகின் வெப்பநிலை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருவது நிரூபணமாகிறது என தெரிவித்துள்ளனர்.