PUBLISHED ON : ஜூலை 12, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
எகிப்தியர்களின் நம்பிக்கை
முதலை ஒரு நீர்வாழ் உயிரினம். இது மற்ற உயிரினங்களை தாக்கும். பண்டைய எகிப்தியர்கள், முதலையை வணங்கினர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனின் பர்மிங்ஹாம் மியூசியத்தில் 7.2 அடி நீளமுள்ள பழங்கால முதலை எலும்பு கூடு காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், முதலைக்கு பிரட், கறி, மது உள்ளிட்ட உணவுகளை வழங்கி வணங்கும் மரபு, பண்டைய எகிப்தியர்களிடம் இருந்தது என கண்டறிந்தனர். நைல் நதியின் அவதாரமான சோபக் கடவுளாக, முதலையை அவர்கள் வணங்கினர் என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
காகித பை, பெண் கல்வி தினம்
* மக்காத பாலித்தீன் பை-க்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற காகித பை பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தி ஜூலை 12ல் உலக காகித பை தினம் கடை பிடிக்கப்படுகிறது. * வாழ்க்கையில் எப்போதும் எளிமையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்க எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹென்றி டேவிட் பிறந்த தினம் தேசிய எளிமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
* பெண் கல்வியை வலியுறுத்தி, போராடும் ஆப்கன் சிறுமி மலாலா பிறந்தினம் (ஜூலை 12), 'மலாலா' தினமாக கடைபிடிக்கப்படுகிறது.